சுப்ரீம் கோர்ட் நீதிபதி என்.வி.ரமணாவின் பதவிகாலம் நிறைவு – யு.யு.லலித் பதவியேற்பு!
தற்போது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து வரும் என்வி ரமணாவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதியுடன் நிறைவடைவதால் புதிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்கவுள்ளார்.
தலைமை நீதிபதி
இந்தியாவின் 48 ஆவது தலைமை நீதிபதியான என்.வி.ரமணாவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கிறது. அடுத்த நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என என்.வி.ரமணாவிடம் கேட்ட போது யு.யு.லலித்தை நியமிக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். இதன்படி, இந்தியாவின் 49வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்க இருக்கிறார். மேலும், வரும் நவம்பர் 8ம் தேதியுடன் யு.யு.லலித் ஓய்வு பெற இருப்பதால் அவரின் பதவிக்காலம் 74 நாட்கள் மட்டுமே இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தட்டச்சர்களுக்கு 7வது ஊதியக்குழு அடிப்படையில் ஊதிய உயர்வு? ஐகோர்ட் உத்தரவு!
வழக்கறிஞராக இருந்து நேரடியாகவே கடந்த 2014ம் ஆண்டு யு.யு.லலித் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியானார். இதன் பின்னர் 13வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார். யு.யு.லலித்தின் பதவி காலத்திற்கு பிறகு தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து வரும் பி.எஸ்.நரசிம்ஹா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஒன்றிய அரசு நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பது குறித்து பரிசீலனை செய்தால் யு.யு.லலித்தின் பதவி காலம் இரண்டு ஆண்டுகள் அதிகரிக்கப்பட்டு 2024ம் ஆண்டு நவம்பர் வரைக்கும் பதவியில் இருப்பார் என கூறப்படுகிறது.
Exams Daily Mobile App Download
தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 65 ஆக இருக்கிறது. இந்த வயதை 67 ஆக உயர்த்த வேண்டும் என நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை செய்திருந்தது. ஆனால், ஓய்வூதிய வயதை அதிகரிக்கும் யோசனை ஒன்றிய அரசால் நிராகரிக்கப்படவில்லை. இதனால், மீண்டும் ஒன்றிய அரசு இந்த கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்வி ரமணாவும் ஓய்வு வயதை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.