Whatsapp பயனர்களுக்கான சூப்பர் அப்டேட் – மெசேஜ்களை Delete செய்வதில் புதிய வசதி!

0
Whatsapp பயனர்களுக்கான சூப்பர் அப்டேட் - மெசேஜ்களை Delete செய்வதில் புதிய வசதி!
Whatsapp பயனர்களுக்கான சூப்பர் அப்டேட் - மெசேஜ்களை Delete செய்வதில் புதிய வசதி!
Whatsapp பயனர்களுக்கான சூப்பர் அப்டேட் – மெசேஜ்களை Delete செய்வதில் புதிய வசதி!

Whatsapp நிறுவனம் அடிக்கடி சூப்பர் சூப்பரான அப்டேட்களை வெளியிட்டபடியே இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது Whatsapp செயலியில் Delete செய்வதற்கான புதிய வசதி ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது.

Whatsapp:

Beta நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் நிறுவனம் அவ்வப்போது புது புது அப்டேட்களை வெளியிட்டபடி இருந்து வருகிறது. உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், வாட்ஸ்ஆப் செயலியில் மற்ற செயலியை காட்டிலும் கூடுதல் பாதுகாப்பது அம்சங்கள் வழங்கப்படுவதால் பலரும் வாட்ஸ்ஆப் மூலமாகவே ரகசியமான செய்திகள் அனைத்தையும் பகிர்ந்து வருகின்றனர். மேலும், பயனாளர்களின் விருப்பத்தை அறிந்தே வாட்ஸ்ஆப் நிறுவனம் சில அப்டேட்களை வெளியிட இருக்கிறது.

வங்கிகள் வழங்கிய கடன் விகிதம் அதிகரிப்பு? ரிசர்வ் வங்கி புதிய அறிக்கை!

அதாவது, வாட்ஸ்ஆப் செயலியில் யார் யாரெல்லாம் உங்களது ஸ்டேட்டஸ், DP ஆகியவற்றை பார்க்க வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளலாம். அதே போல தற்போது ஆன்லைனில் இருப்பதையும் காட்டாமல் மறைத்துக்கொள்ளும்படியான அப்டேட்டை கூடிய விரைவில் வாட்ஸ்ஆப் நிறுவனம் வழங்க இருக்கிறது. மேலும், இன்ஸ்டாகிராம் போன்ற செயலியை போலவே வாட்ஸ்ஆப் செயலியிலும் வீடியோ காலில் அவதார் போன்ற அம்சங்களை கொண்டு வர வாட்ஸ்ஆப் முயற்சி செய்து வருகிறது. கூடிய விரைவில் அந்த அப்டேட்டும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

அதே நேரத்தில், ஒருவருக்கு அனுப்பும் பிரைவேட் சேட் மற்றும் குரூப் சேட்டில் தவறாக அனுப்பும் செய்தியை delete செய்துகொள்ளும் புதிய வசதியையும் வாட்ஸ்ஆப் தர இருக்கிறது. அதாவது, தவறாக அனுப்பப்பட்ட செய்தியை 2 நாட்கள் வரைக்கும் Delete For Everyone செய்துகொள்ளும் வசதியை வாட்ஸ்ஆப் நிறுவனம் வழங்க இருக்கிறது. அதே போல, வாட்ஸ்ஆப் குரூப்பில் யாராவது தேவையில்லாத செய்தியை பகிர்ந்தாலும் குரூப் அட்மின் அந்த செய்தியை நீக்குவதற்கான அப்டேட்டும் வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!