Whatsapp பயனர்களுக்கான சூப்பர் அப்டேட் – வேறு நம்பர் இல்லாமலே உங்களுக்கே SMS அனுப்பலாம்!

0
Whatsapp பயனர்களுக்கான சூப்பர் அப்டேட் - வேறு நம்பர் இல்லாமலே உங்களுக்கே SMS அனுப்பலாம்!
Whatsapp பயனர்களுக்கான சூப்பர் அப்டேட் - வேறு நம்பர் இல்லாமலே உங்களுக்கே SMS அனுப்பலாம்!
Whatsapp பயனர்களுக்கான சூப்பர் அப்டேட் – வேறு நம்பர் இல்லாமலே உங்களுக்கே SMS அனுப்பலாம்!

வாட்ஸ்ஆப் நிறுவனம் தற்போது ஒரு புதிய அப்டேட் குறித்தான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதாவது, வேறு எந்த நம்பரும் இல்லாமல் உங்களுக்கே நீங்கள் செய்தியை பகிர்ந்து கொள்ளும் படியான அப்டேட் வெளியாக இருக்கிறது.

வாட்ஸ்ஆப் அப்டேட்:

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் நிறுவனம் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து பல அப்டேட்களை வெளியிட்டபடியே இருந்து வருகிறது. இன்னும் ஏகப்பட்ட அப்டேட்டை வெளியிட தயாராக வைத்திருக்கிறது. கடந்த சில வாரத்திற்கு முன்பு தான் ஆன்லைனில் இருப்பதை யார் யாரெல்லாம் பார்க்க வேண்டும் என்பதையும், யாரிடமிருந்து மறைக்க வேண்டும் என்பதையும் நீங்களே முடிவு செய்துகொள்ளும்படியான அப்டேட்டையும் வாட்ஸ்ஆப் நிறுவனம் வழங்கியிருக்கிறது.

இதனையடுத்து, வாட்ஸ்ஆப் குரூப்பில் இருந்து யாருக்குமே தெரியாமல் வெளியேறும்படியான அப்டேட்டும் வெளியாகியிருக்கிறது. மேலும், வாட்ஸ்ஆப் செயலியில் இருந்தே பொருட்களை ஆர்டர் செய்துகொள்ளும் வசதியையும் அறிமுகம் செய்திருக்கிறது. இதற்காக வேறு எந்த செயலியையும் பதிவிறக்கம் செய்ய தேவையில்லை. வாட்ஸ்ஆப் செயலியில் இருந்தே பொருட்களை வாங்கி அதிலேயே பண பரிவர்த்தனையையும் செய்து கொள்ளலாம்.

தமிழகத்தில் நாளை (செப்.3) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!

இந்நிலையில், உங்களது வாட்ஸ்ஆப் செயலியில் இருந்தே இரண்டாவது நம்பர் இல்லாமலேயே உங்களுக்கே செய்தி அனுப்பிக்கொள்ளும்படியான அப்டேட் கூடிய விரைவில் வர இருக்கிறது. இந்த அப்டேட் மூலமாக முக்கியமான செய்திகள் ஆகியவற்றை நீங்கள் மட்டும் தெரிந்து கொள்வதற்காக சேமித்து வைத்து கொள்ளலாம். தற்போது இந்த அப்டேட் சோதனையில் இருக்கிறது. கூடிய விரைவில் வாட்ஸ்ஆப் நிறுவனம் இந்த அப்டேட்டை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!