தமிழகத்தில் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சூப்பர் வாய்ப்பு – புதிய வெப்சைட் அறிமுகம்!

0
தமிழகத்தில் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சூப்பர் வாய்ப்பு - புதிய வெப்சைட் அறிமுகம்!
தமிழகத்தில் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சூப்பர் வாய்ப்பு - புதிய வெப்சைட் அறிமுகம்!
தமிழகத்தில் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சூப்பர் வாய்ப்பு – புதிய வெப்சைட் அறிமுகம்!

தமிழகத்தில் சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் சார்பில் ஒரு புதிய வெப்சைட் ஒன்று தமிழக அரசின் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.

புதிய வெப்சைட்:

உலகம் முழுவதும் டிஜிட்டல் முறையிலான சேவைகள் தான் பெருகி வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டிலும் உள்ள குடிசை தொழில், சிறு குறுமற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகப்படுத்த புதிதாக ஒரு வெப்சைட் தமிழக அரசின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தலைமையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் துறையிலான Valar 4.0 வெப்சைட் துவங்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த வெப்சைட் மூலமாக தமிழகத்தில் உள்ள குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழிலின் திறனை மேம்படுத்த, உற்பத்தியைப் பெருக்க, நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த, கருத்துக்களைப் பரிமாற, பிரச்சனைகளை கையாள, சவால்களுக்குத் தீர்வுகாணவும் வகையில் இந்த வெப்சைட்டை பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தின் மூலமாக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களின் விவரங்கள், திட்டங்கள் சம்மந்தப்பட்ட அனைத்து தகவலும் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கான அரசு வேலை – மாத சம்பளம்: ரூ.14,500..!

இந்த வெப்சைட் துவங்கப்பட்டு ஏப்ரல் மாதத்திலேயே 242 நிறுவனங்கள் புதிதாக இந்த திட்டத்தில் சேர்ந்துள்ளன. மேலும், 29 நகரங்களிலிருந்து Valar 4.0 வெப்சைட்டில் 122 புதிய பயனர்கள் தங்களது பெயர், நிறுவனங்களின் பெயர் மற்றும் தங்களது விவரங்கள் அனைத்தையும் பதிவு செய்துள்ளனர். இத்துடன், 279 சேவைகள், 20 திட்டங்கள் மற்றும் 389 நிபுணர்களின் விவரங்கள் அனைத்தும் Valar 4.0 வெப்சைட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், சுயதொழில் செய்ய விரும்புபவர்கள் இந்த திட்டத்தில் இணைந்து தங்களது தொழிலை டிஜிட்டல்மயமாக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!