TNEBல் 8000 காலிப்பணியிடங்களுக்கான சூப்பர் அறிவிப்பு – அரசிற்கு நீதிமன்றம் உத்தரவு!

0
TNEBல் 8000 காலிப்பணியிடங்களுக்கான சூப்பர் அறிவிப்பு - அரசிற்கு நீதிமன்றம் உத்தரவு!
TNEBல் 8000 காலிப்பணியிடங்களுக்கான சூப்பர் அறிவிப்பு - அரசிற்கு நீதிமன்றம் உத்தரவு!
TNEBல் 8000 காலிப்பணியிடங்களுக்கான சூப்பர் அறிவிப்பு – அரசிற்கு நீதிமன்றம் உத்தரவு!

தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 8000 கள உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகளை உடனே விரைந்து முடிக்க வேண்டும் என தமிழக அரசிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

தமிழகத்தில் மின்சார வாரியத்தில் ஏகப்பட்ட காலிப்பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் இருப்பதாக தகவல் வெளியாகிய வண்ணம் இருக்கிறது. மக்களுக்கு அடிப்படை சேவைகளில் ஒன்றாக மின்சாரம் இருக்கும் நிலையில், இத்தனை காலி பணியிடங்கள் இருப்பதால் சேவைகளில் பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 8000 கள உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறை குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 2016 ஆம் ஆண்டில் கள உதவியாளர் பணி காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்த காலி பணியிடங்களுக்கு எழுத்து மற்றும் நேர்முக தேர்வு ஆகியவை நடத்தப்பட்டு 3170 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்றவர்களில் 900 பேர் மட்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தகுதி உடைய பலருக்கு இன்னும் நியமனம் வழங்கப்படாமல் இருக்கிறது. அதன் பின் 2020 ஆம் ஆண்டில் 2900 கள உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – ஷாக் ரிப்போர்ட்!

கொரோனா பரவல் காரணமாக தேர்வு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் இந்த பணியிடங்களில் கேங் மேன் பணிக்கு தேர்வான 10000 பேரில் சிலரை கள உதவியாளர் பணிகளில் பணியமர்த்தினார்கள். அதனால் போதிய விழிப்புணர்வு இல்லாமல் அவர்கள் மின் விபத்துகளால் பாதிக்கப்படுகின்றனர். எனவே 2016 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டவர்களில் நியமனம் வழங்காமல் இருப்பவர்களுக்கு நியமனம் வழங்கப்பட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது.

Exams Daily Mobile App Download

அந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் தமிழக அரசு தரப்பில் கூறுகையில், 2017 ஆம் ஆண்டு வெளியான முடிவுகளின் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டு காலி பணியிடங்களை நியமனம் செய்ய முடியாது. மேலும் தற்போது 5032 பணியிடங்களில் கள உதவியாளர்கள் பணிபுரிந்து வருவதாகவும், அதை தவிர 29,050 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதில் 8000 பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

அதன் பின் பேசிய நீதிபதி டி.கிருஷ்ணகுமார் கூறுகையில், தற்போது தேர்வு நடைமுறை நிலுவையில் இருப்பதால் மனுதாரர் குறிப்பிட்ட கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என தெரிவித்தார். இருந்த போதிலும் காலி பணியிடங்களை நிரப்ப தமிழக அரசும், டிஎன்பிஎஸ்சியும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும் பேசிய அவர் அதுவரை விதிகளுக்கு உட்பட்டு தகுதி வாய்ந்தவர்களை பணி நிரந்தரம் கோர முடியாது என தெரிவித்தார். ஆனாலும் நிபந்தனையுடன் தற்காலிக அடிப்படையில் நியமிக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளார். அது மட்டுமில்லாமல் கள உதவியாளர் பணியில் கேங்மேன்களை பணியமர்த்தக்கூடாது என்ற விதியை பின்பற்ற வேண்டும் அரசிற்கு எச்சரிக்கை விடுத்து உத்தரவிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!