மத்திய அரசின் PM KISAN திட்ட பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு – கால அவகாசம் நீட்டிப்பு!

0
மத்திய அரசின் PM KISAN திட்ட பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு - கால அவகாசம் நீட்டிப்பு!
மத்திய அரசின் PM KISAN திட்ட பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு - கால அவகாசம் நீட்டிப்பு!
மத்திய அரசின் PM KISAN திட்ட பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு – கால அவகாசம் நீட்டிப்பு!

விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் பணம் பெறுவதற்கு eKYC செயல்முறைகளை முடிக்க கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் விரைந்து eKYC செயல்முறைகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பதிவில் ஆன்லைனில் eKYC அப்டேட் செய்வது குறித்து பார்ப்போம்.

கிசான் திட்டம்:

இந்தியாவில் விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கும் வகையில் 2018 ஆம் ஆண்டு கிசான் திட்டம் கொண்டு வரப்பட்டது விவசாயிகளிடையே வரவேற்பை பெற்றது. இந்த திட்டத்தின் மூலம் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ரூபாய் 2,000 வீதம் ஆண்டுதோறும் 3 கட்டமாக மொத்தம் ரூ.6,000 நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. நிலம் உடைய எல்லா விவசாயக் குடும்பங்களுக்கும் கிசான் தொகை கிடைக்கும். இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் நிதி பெற பல்வேறு நிபந்தனைகளும் உள்ளது.

Exams Daily Mobile App Download

அதன் படி மத்திய, மாநில அரசு பதவிகளை வகிப்பவர்கள், முன்னாள் தலைமை பதவி வகித்தவர்கள் . மாதாந்திர ஓய்வூதியம் பெறுபவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது. இத்திட்டத்தில் தவணையைப் பெற, தகுதியுள்ள விவசாயிகள் தங்கள் கேஒய்சி விவரங்களை புதுப்பிப்பது அவசியமாகும். தற்போது 11 வது தவணை தொகையை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் eKYC செயல்முறைகளை முடிக்க கால அவகாசம் மே 22ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Amazon நிறுவனத்தில் காலியாக உள்ள Quality Analyst பணியிடம் – பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

eKYC விவரத்தை புதுப்பிக்கும் முறை:

https://pmkisan.gov.in என்ற இணையத்தளத்தில் Farmers Corner என்ற பிரிவில் eKYC என்பதனை தேர்தெடுக்கவும்.
புதிதாக திறக்கும் பக்கத்தில் ஆதார் எண் பதிவிட்டு Search பட்டனை கிளிக் செய்யவும். இப்போது மொபைல் எண் பதிவிட்டு OTP பெறவும். அந்த எண்ணை பதிவிட்டு Submit கொடுக்கவும். பிறகு உங்கள் eKYC முடிந்து விடும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!