இனிமே எப்பவும் ரயில் பயணம் தான்.. பணம் செலுத்தாமலே ரயில் டிக்கெட் – IRCTC வெளியிட்ட சூப்பர் நியூஸ்!

0
இனிமே எப்பவும் ரயில் பயணம் தான்.. பணம் செலுத்தாமலே ரயில் டிக்கெட் - IRCTC வெளியிட்ட சூப்பர் நியூஸ்!
இனிமே எப்பவும் ரயில் பயணம் தான்.. பணம் செலுத்தாமலே ரயில் டிக்கெட் - IRCTC வெளியிட்ட சூப்பர் நியூஸ்!
இனிமே எப்பவும் ரயில் பயணம் தான்.. பணம் செலுத்தாமலே ரயில் டிக்கெட் – IRCTC வெளியிட்ட சூப்பர் நியூஸ்!

ரயிலில் பயணம் செய்து, டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் நபராக நீங்கள் இருந்தால், தற்போது உங்களுக்கான ஒரு நற்செய்தியை IRCTC விரைவில் வெளியிட உள்ளது. அது பற்றிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.

பணமே செலுத்தாமலே ரயில் டிக்கெட்:

இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே அதிக அளவு விரும்பி பயணிப்பர். குறிப்பாக நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்தும் பயணிப்பார்கள். ஏனெனில் டிக்கெட் கட்டணம் ரயில்களில் தான் குறைவு என்பதோடு, வேகமாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்கலாம் என்பதற்காகவே மக்கள் அதிகளவு ரயில் பயணத்தை மேற்கொள்கின்றனர். இப்படி இருக்கையில் ரயில் பயணிகளுக்கான, குறிப்பாக ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பை IRCTC அறிவிக்க உள்ளது.

Follow our Instagram for more Latest Updates

அதாவது, ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பணமே செலுத்தாமல் முன்பதிவு செய்யும் திட்டத்தை விரைவில் ஐஆர்சிடிசி அறிவிக்க உள்ளது. பல்வேறு ஆன்லைன் வர்த்தகங்கள் தற்போது எல்லாம் Buy Now Pay Later என்ற திட்டம் மூலம் பொருள்களை தேவைப்படும் போது வாங்கிக்கொண்டு, பின்னர் ஒரு மாதம் கழித்து பணத்தை கட்டி கொள்ளலாம் என்ற திட்டத்தை அமல்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இதற்கு எந்த வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை.

தமிழகத்தில் வரும் ஆண்டுகளில் புதிய கல்லூரிகள் – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

இதே முறையை தற்போது IRCTC-ரயில் டிக்கெட்டில் அறிமுகப்படுத்த உள்ளது. அதாவது, ஐஆர்சிடிசி கேஷ்-இ என்ற நிறுவனத்துடன் இணைந்து ‘Travel Now Pay Later’ என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது. பயணிகள் முன்பதிவு செய்யும் போது அவர்களுக்கான பணத்தை கேஷ்-இ நிறுவனம் செலுத்தி விடும். அதன் பின் ஒரு குறிப்பிட்ட நாளுக்கு பிறகு, பயணிகளிடம் இருந்து இ.எம்.ஐ வசதி அல்லது தவணை முறை மூலம் பணத்தை வசூல் செய்து கொள்ளும். இதற்கு எந்த வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!