தமிழகத்தில் நாளை மறுநாள் ( மே 8) சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் – சுகாதாரத்துறை அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை மறுநாள் ( மே 8) சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் - சுகாதாரத்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை மறுநாள் ( மே 8) சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் - சுகாதாரத்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை மறுநாள் ( மே 8) சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் – சுகாதாரத்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பெரும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதை தடுக்க சுகாதாரத்துறை, மீண்டும் தடுப்பூசி முகாம்களை நடத்த திட்டமிட்டு உள்ளது. அந்த வகையில் நாளை மறுநாள் ( மே 8) சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மெகா தடுப்பூசி முகாம்:

கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பொது முடக்கம், முககவசம், தனிமனித இடைவெளி போன்ற நடவடிக்கைகளை கையில் எடுத்தது. மேலும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் பேராயுதமாக பயன்பட்டது. நாடு முழுவதும் இதுவரை 189 கோடி டோஸ்களுக்கும் அதிகமாக தடுப்புசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் பலனாக நாடு முழுவதும் நோய் தொற்று பரவல் கடந்த ஜனவரி மார்ச் இறுதியில் இருந்து குறையத் தொடங்கின. இருப்பினும் தற்போது கொரோனா உருமாற்றம் அடைந்து மீண்டும் பரவத் தொடங்கி உள்ளது. இதனால் மீண்டும் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி, தடுப்பூசிகள் போன்ற ஆயுதங்களை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது.

Exams Daily Mobile App Download

தமிழகத்தில்,ஞாயிற்றுக் கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இருந்தபோதிலும் தமிழ்நாட்டில் தற்போது வரை 1.50 கோடி பேர் 2வது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ளனர். இதனால் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆகையால் மீண்டும் தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் , வருகிற 8 ஆம் தேதி ( நாளை மறுநாள் ) நடத்தப்படும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) தொகை 38% ஆக உயர்வு? முழு விவரம் இதோ!

இந்த தடுப்பூசி முகாமில் 2வது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மேலும் கிராம வாரியாக தடுப்பூசி போடாதவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு சுகாதாரத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களின் பெயர், கைபேசி எண், தடுப்பூசியின் பெயர், முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய நாள், 2வது டோஸ் செலுத்த வேண்டிய நாள், தடுப்பூசி செலுத்தி எத்தனை நாள் ஆகியுள்ளன போன்ற விவரங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த விவரங்களைக் கொண்டு தேவைக்கேற்ப கிராம வாரியாக ஒன்றுக்கும் மேற்பட்ட தடுப்பூசி முகாம்கள் கூட அமைக்கப்படும் என்று பொது சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here