Post Officeல் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தேர்வு இல்லாமல் வேலை – பெண்களுக்கான சூப்பர் அறிவிப்பு!

0
Post Officeல் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தேர்வு இல்லாமல் வேலை - பெண்களுக்கான சூப்பர் அறிவிப்பு!
Post Officeல் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தேர்வு இல்லாமல் வேலை - பெண்களுக்கான சூப்பர் அறிவிப்பு!
Post Officeல் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தேர்வு இல்லாமல் வேலை – பெண்களுக்கான சூப்பர் அறிவிப்பு!

அஞ்சல் அலுவலகங்களில் தேர்வு இல்லாமல் 38926 GDS பதவிகளுக்கான இந்திய பதவி ஆட்சேர்ப்பு 2022 வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பின்படி பணிகளில், பெண்கள் எந்த வேலையை தேர்வு செய்யலாம் உள்ளிட்ட சந்தேகங்கள் எழுந்து உள்ளது. இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு:

இந்திய அஞ்சல் சேவையானது நாடு முழுவதும் உள்ள கிராமப்புற அஞ்சல் ஊழியர்களின் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 38926 GDS பதவிகளுக்கான இந்திய பதவி ஆட்சேர்ப்பு 2022 அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தபால் அலுவலகத்தில் வேலை தேட விரும்புவோருக்கு இது அருமையான வாய்ப்பு ஆகும். இந்த பதவிகளுக்கு தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் தபால் நிலையங்களில் கிராம டக் சேவாக்ஸ் (BPM) மற்றும் உதவி கிராம பதவி (ABPM/DakSevak) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 38,926 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 4,310 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி 05.06.2022 ஆகும்.

அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – மே 30 & 31 தேதிகளில் விடுமுறை?

1. முதலில் கம்ப்யூட்டர் கோர்ஸ் ஏதாவது முடித்து இருந்தால், அந்த கணினி சான்றிதழ் விண்ணப்பிப்பதற்கு பயன்படுமா? பயன்படும் என்றால் எப்படி விண்ணப்பிப்பது?

11, 12ம் வகுப்பில் கம்ப்யூட்டர் குரூப் எடுத்திருந்தால் 12 ஆம் வகுப்பு சான்றிதழையும் கூட அப்லோட் செய்யலாம். அல்லது கல்லூரியில் கம்ப்யூட்டர் தொடர்பாக படித்திருந்தால் அந்த செமஸ்டர் மதிப்பெண் சான்றிதழை அப்லோட் செய்யலாம். அல்லது வெளியே எங்கேயாவது கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்து முடித்து அந்த சான்றிதழ் வைத்திருந்தாலும் விண்ணப்பத்தில் அப்லோட் பண்ணலாம்.

2. சாதி சான்றிதழ் பிரிவில், எதில் விண்ணப்பிக்கலாம்?

விண்ணப்பிப்பவர் ஓ.பி.சி அல்லது எம்.பி.சி பிரிவில் வருகிறார் என்றால் ஓ.பி.சி பிரிவில் விண்ணப்பிக்கலாம். யூ.ஆர் (Ur-Unreserved பிரிவிலும் விண்ணப்பிக்கலாம். ஆனால், விண்ணப்பிக்கும்போது முதல் பக்கத்தில் எந்த சாதி (community) என்ற பிரிவில் நீங்கள் ஓ.பி.சி.யாக இருந்தால் ஓ.பி.சி என்று விண்ணப்பிக்க வேண்டும்.

அதே போல, பட்டியல் இனத்தவர் (எஸ் சி) என்றால் எஸ்சி என்று விண்ணப்பிக்க வேண்டும். அதே நேரத்தில் யூஆர் என்றும் விண்ணப்பிக்கலாம். அதே போல, இ.டபில்யூ.எஸ் EWS பிரிவினரும் EWS அல்லது (Ur) விண்ணப்பிக்கலாம்.

3. டிவிஷன் தேர்வு குறித்து எழுந்த சந்தேகம்?

இந்த முறை ஒருவர் ஒரே ஒரு டிவிஷனை மட்டும்தான் தேர்வு செய்து விண்ணப்பிக்க முடியும்.உதாரணத்திற்கு ஒருவர் கன்னியாகுமரி டிவிஷனுக்கு விண்ணப்பிக்கிறார் என்றால், அந்த ஒரு டிவிஷனுக்கு மட்டும் தான் விண்ணப்பிக்க முடியும்

4. கட் ஆஃப் மதிப்பெண் குறித்து எழுந்த சந்தேகம்?

480 மதிப்பெண் வரைக்கும் ஓ.பி.சி பிரிவினருக்கு பார்பார்கள். எஸ்சி பிரிவில் 475-480 மதிப்பெண் வரைக்கும் இருந்தால்தான் வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. மற்றவர்களுக்கு வேலை கிடைக்காதா என்றால், இந்த வேலை 10ம் வகுப்பு மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டு பணியாளரைத் தேர்வு செய்கிற வேலை என்பதால், இது முழுக்க முழுக்க மதிப்பெண் அடிப்படையில், எடுக்கப்படுவதால் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு இந்த வேலை கிடைக்கும்.

இருப்பினும் முன்னாள் விண்ணப்பித்த அதிக மதிப்பெண் எடுத்துள்ள விண்ணப்பதாரர் வரவில்லை என்றால் அடுத்து உள்ளவர்களுக்கு கிடைக்கும். அந்த அடிப்படையில் வேண்டுமானல், மதிப்பெண் குறைவாக எடுத்தவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது .

5. பெண்களுக்கு ஏ.பி.பி.எம் (Assistant Branch Post Master) வேலை பொருத்தமாக இருக்குமா?

ABPM வேலை என்பது போஸ்ட் மாஸ்டர் வேலைதான். இதில் தபால்களை கொண்டு செல்கிற பணிதான். பெரும்பாலும் கிராமங்களில்தான் பணி இருக்கும். முழுக்க முழுக்க வாகனத்தில் பயணம் செய்து தபால்களை கொடுப்பதாக இருக்கும். அதனால், இந்த வேலை பெண்களுக்கு பொருத்தமாக இருக்குமா என்று முடிவு செய்து பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!