தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்வோருக்கு சூப்பர் அறிவிப்பு – செயலி அறிமுகம்!

0
தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்வோருக்கு சூப்பர் அறிவிப்பு - செயலி அறிமுகம்!
தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்வோருக்கு சூப்பர் அறிவிப்பு - செயலி அறிமுகம்!
தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்வோருக்கு சூப்பர் அறிவிப்பு – செயலி அறிமுகம்!

வெளியூர் பயணிகள் பேருந்துகளின் நேரம் தெரியாமல் தவிப்பதன் காரணமாக சென்னை மாநகர பேருந்துகளின் நேரம் மற்றும் பயண விவரத்தை அறியும்படியான செயலியை போக்குவரத்துத்துறை அறிமுகம் செய்துள்ளது.

பேருந்துகளின் நேரம் அறியும் செயலி:

பள்ளிக்கு செல்லும் குழந்தைகளில் இருந்து வேலைக்கு செல்லும் முதியவர்கள் வரை அனைவரும் பேருந்து பயணத்தை தான் மேற்கொண்டு வருகின்றனர். பேருந்து போக்குவரத்தை விட ரயில் போக்குவரத்து குறைவான கட்டணமாக இருந்தாலும் கூட அடிக்கடி வெளியே செல்ல ரயில்கள் இருப்பதில்லை. குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே ரயில்கள் இருக்கின்றன. இதனால் பேருந்தை தான் அதிக அளவில் மக்கள் பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது தான் பெண்களுக்கு பேருந்தில் பயணம் செய்ய இலவசம் என அறிவிக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

இதனால் தமிழகம் முழுவதும் உள்ள பெண்கள் இலவச பேருந்து பயணத்தால் பயனடைந்து வருகின்றனர். கொரோனா காலகட்டத்தில் கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகள் வரைக்கும் பேருந்துகள் இயங்கவில்லை. தற்போது வழக்கம் போல அனைத்து பகுதிகளுக்குமே பேருந்து போக்குவரத்து இருந்துவருகிறது. மேலும், வெளியூர் பயணிகள் எந்தெந்த நேரத்தில் எந்தெந்த பேருந்துகள் இருக்கும் என தெரியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், வெளியூர் பயணிகளின் சிரமத்தை போக்க சென்னை மாநகர பேருந்துகளின் நேரம் மற்றும் பயண விவரத்தை அறியும்படியான செயலியை போக்குவரத்துத்துறை அறிமுகம் செய்துள்ளது.

அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவில் தளர்வு – மாநில அரசு முக்கிய அறிவிப்பு!

இந்த செயலியை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று திறந்து வைத்துள்ளார். மேலும், பேருந்துகளில் தான் அதிக அளவில் விபத்துகளும் நடக்கின்றன. பேருந்து படியில் தொங்கி கொண்டே செல்வதால் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட காரணமாகிறது. இதனால் பல பேருந்துகளில் தானியங்கி கதவுகளுடன் தான் இயங்கி கொண்டிருக்கிறது. அதாவது பயணி பேருந்துக்குள் ஏறியதும் தானாகவே கதவு மூடிக்கொள்ளும். இதே போன்று பல பகுதிகளில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here