பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு, இனி கணினி வழியில் கல்வி – ஆளுநர் திட்டம்!

0
பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு, இனி கணினி வழியில் கல்வி - ஆளுநர் திட்டம்!
பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு, இனி கணினி வழியில் கல்வி - ஆளுநர் திட்டம்!

பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு, இனி கணினி வழியில் கல்வி – ஆளுநர் திட்டம்!

புதுச்சேரியில் உள்ள பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகளை கணிணி மயமாக்கி டிஜிட்டல் முறையில் மாணவர்கள் கல்வி பெறுவதற்கு மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.நமச்சிவாயம் அவர்களுடன் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை ஆலோசனை மேற்கொண்டார். தற்போது இது குறித்த முக்கிய அறிவிப்பை ஆளுநர் தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் தமிழிசை அறிவிப்பு:

இந்தியாவில் ஓமைக்ரான் மற்றும் அதன் மறு உருவமான ஓமைக்ரான் தொற்று பரவல் காரணமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதையடுத்து ஓமைக்ரான் மற்றும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், கர்நாடகா, மணிப்பூர், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் புதிய கட்டுபாடுகளை அமல் படுத்தி பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்க பட்டது. இதையடுத்து அரசு திடீர் முடிவெடுத்து பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது . இதனை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் நோய் தொற்று கட்டுக்குள் இருப்பதால் அங்கு எவ்வித கட்டுப்பாடும் இன்றி பள்ளி ,கல்லூரி மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகளை கணிணி மயமாக்கி டிஜிட்டல் முறையில் கற்றுக்கொள்வதற்கு வசதியாக மேம்பாடு செய்வது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயத்துடன் புதுச்சேரி ராஜ்நிவாஸில் தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆலோசனை மேற்கொண்டார். அதில் புதுச்சேரியில் உள்ள பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகளை கணிணி மயமாக்கி டிஜிட்டல் முறையில் கற்றுக்கொள்வதற்கு வசதியாக மேம்பாடு செய்வதற்கும், பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளையும் மேம்படுத்தி, மதிய உணவில் நவ தானியங்களையும், கருப்பட்டி,வேர்க்கடலை,வாழைப்பழம் போன்ற சத்தான உணவுகளை மதிய உணவு திட்டத்தில் சேர்க்கும் திட்டம் குறித்து ஆலோசனையும்,அறிவுரையும்,வழிகாட்டுதலும் வழங்கினார்.

மாநிலம் முழுவதும் மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்? கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

மேலும் இது குறித்து ஆளுநர் தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில் , புதிய கல்விக்கொள்கைகளின்படி மாணவர்களுக்கு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் அவர்களது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்தான உணவுகளை வழங்குவதோடு அதை கண்காணிக்க வேண்டும் என்றும் வருகிற 2023 ஆம் ஆண்டை நவதானியங்கள் ஆண்டாக உலக உணவு விவசாய அமைப்பு உலக நாடுகளுடன் கொண்டாட இருக்கின்றது அதை முன்னின்று நடத்துவதற்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது என்பதையும் நான் கூறினேன் என்று தெரிவித்துள்ளார்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here