SBI வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – WhatsApp வங்கி அறிமுகம்!

0
SBI வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - WhatsApp வங்கி அறிமுகம்!
SBI வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - WhatsApp வங்கி அறிமுகம்!
SBI வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – WhatsApp வங்கி அறிமுகம்!

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தனது வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் அடிப்படையிலான வங்கி சேவையை வழங்கத் தொடங்கியுள்ளது. இப்போது, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி கணக்கு இருப்பை சரிபார்க்கும் மற்றும் மினி அறிக்கைகளை பார்க்கும் வசதி உள்ளது.

WhatsApp வங்கி:

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாகும். மிகவும் அதிக அளவிலான வாடிக்கையாளர்களை கொண்டு இயங்கி வருகிறது. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வாட்ஸ்அப் அடிப்படையிலான சேவைகளை தளத்தின் மூலம் வழங்குகிறது. SBI கிரெடிட் கார்டுகளைக் கொண்ட வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கு தொடர்பான பல அம்சங்களை சரிபார்க்க இதைப் பயன்படுத்தலாம். இதனை கார்டுதாரர்கள் கணினியில் பதிவு செய்ய 9004022022 என்ற எண்ணுக்கு ‘OPTIN’ என்ற WhatsApp செய்தியை அனுப்ப வேண்டும். சேவையில் பதிவு செய்ய, அவர்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் ஃபோனில் இருந்து 08080945040 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் செய்யலாம்.

Exams Daily Mobile App Download

இப்போது, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி கணக்கு இருப்பைச் சரிபார்க்கலாம் மற்றும் மினி அறிக்கைகளைப் பார்க்கலாம். இதற்காக SBI அதிகாரப்பூர்வ ட்வீட் செய்துள்ளது. அதில், “உங்கள் வங்கி இப்போது WhatsApp இல் உள்ளது. உங்கள் அக்கவுண்ட் பேலன்ஸ் குறித்தும், பயணத்தின்போது மினி ஸ்டேட்மெண்ட்டைப் பார்க்கலாம் ” என்று தெரிவித்துள்ளது. எஸ்பிஐயின் வாட்ஸ்அப் சேவையை எவ்வாறு பயன்படுத்துவது என்று கேளே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டையில் ஆன்லைன் மூலமாக முகவரி மாற்றம் – எளிய வழிமுறைகள் இதோ!

பயன்படுத்தும் முறை:

  • எஸ்பிஐ வாட்ஸ்அப் பேங்கிங் மூலம் இந்தச் சேவையைப் பயன்படுத்த முதலில் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய, WAREG என தட்டச்சு செய்து, பின்னர் உங்கள் கணக்கு எண்ணை இடைவெளியால் பிரிக்கவும், 7208933148 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.
  • எஸ்பிஐ வாட்ஸ்அப் வங்கிக்கு வெற்றிகரமாக பதிவுசெய்த பிறகு, உங்கள் வாட்ஸ்அப் எண்ணுக்கு எஸ்பிஐயின் 90226 90226 என்ற எண்ணிலிருந்து செய்தி வரும்.
  • இந்த 90226 90226 என்ற எண்ணுக்கு ‘Hi SBI’ என்று அனுப்பவும் அல்லது WhatAppல் நீங்கள் பெற்ற செய்திக்கு பதிலளிக்கவும். நீங்கள் செய்தி அனுப்பியதும், “அன்பார்ந்த வாடிக்கையாளரே, SBI Whatsapp வங்கி சேவைக்கு வரவேற்கிறோம் ” என்ற செய்தியை பெறுவீர்கள்.

    TNPSC Online Classes

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!