LIC பாலிசிதாரர்களுக்கான சூப்பர் அறிவிப்பு – புதிய திட்டம் அறிமுகம்!
காலாவதியாகிவிட்ட காப்பீட்டை புதுப்பித்துக் கொள்ளும் படியான புதிய திட்டத்தை எல்ஐசி நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. மேலும், இந்த திட்டம் அக்டோபர் 21 ஆம் தேதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்ஐசி பாலிசி:
எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு காலாவதியாகிவிட்ட காப்பீட்டை புதுப்பிப்பதற்கான வாய்ப்பை எல்ஐசி நிறுவனம் தற்போது வழங்கியுள்ளது. அதாவது, இந்தியாவின் 75 ஆவது சுதந்திரத்தின விழாவினையொட்டி இந்த வாய்ப்பு பாலிசிதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, ப்ரீமியம் தொகை செலுத்தாமல் காலாவதியாகிவிட்ட பாலிசிகளை வாடிக்கையாளர்கள் மீண்டும் புதுப்பித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் துவங்கப்பட்ட திட்டம் அக்டோபர் 21 ஆம் தேதி வரைக்கும் நடைமுறையில் இருக்கும்.
மேலும், நீண்டகாலமாகவே ப்ரீமியம் தொகை செலுத்தாமல் இருக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்த அளவிலான அபராதம் விதித்து எல்ஐசி பாலிசியை புதுப்பித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, யுலிப் அல்லாத பாலிசிதாரர்களும் அபராதம் விதித்து பாலிசியை புதுப்பித்துக்கொள்ளலாம். மேலும், கடைசி ப்ரீமியம் செலுத்தி 5 ஆண்டுகள் வரையிலான பாலிசிகளை தவிர மற்ற அனைத்து பாலிசிகளையும் இந்த திட்டத்தின் கீழ் புதுப்பித்துக்கொள்ளலாம் என எல்ஐசி நிறுவனம் அறிவித்துள்ளது.
Airtel நிறுவனத்தின் குறைந்த விலை புதிய ரீசார்ஜ் திட்டங்கள் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
அதே போல, மூன்று லட்சம் வரையிலான நிலுவை தொகை இருந்தால் 25 சதவீதமும், மூன்று லட்சத்திற்கு மேல் இருந்தால் 30 சதவிகிதமும் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மைக்ரோ இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கு 100 சதவிகிதம் தாமதக்கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் எனவும், மருத்துவத் தேவைகளுக்கான பாலிசிகளுக்கு எந்தவித தள்ளுபடியும் கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக பாலிசிதாரர்கள் இந்த திட்டத்தின் மூலமாக காப்பீட்டை புதுப்பித்து கொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்