சன்டிவி நாயகி சீரியல் அனு காதலருடன் திருமணம் – இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!
சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி சீரியலில் அனு கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்த பிரதீபாவுக்கு இன்று திருமணம் நடைப்பெற்றுள்ளது.
நாயகி நடிகை:
சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி சீரியலுக்கு ரசிகர்கள் கூட்டம் பெரிய அளவில் இருந்தது. இந்த சீரியலுக்கு ரசிகர்களிடம் ஆர்வமும் அதிகமாக இருக்கிறது. முதலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த பலர் கொரோனா கால மாற்றங்களினால் சீரியலில் இருந்து மாறியுள்ளனர். இந்த தொடரில் கதாநாயகியாக நடித்து வந்த வித்தியா ஒரு நடிகை மட்டும் அல்ல, ஆராய்ச்சி விஞ்ஞானி அப்புறம் ஒரு டாக்டரும் கூட.
TNPSC தேர்வுகளுக்கு இலவச பயிற்சி – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
இருந்தாலும் அவருக்கு மாடலிங்கில் ரொம்ப ஆர்வம் இருந்ததால் டாக்டர் தொழிலை விட்டுவிட்டு மாடலிங்கில் காலடி எடுத்து வைத்தார். பரதநாட்டியம் முறையாக கற்றிருக்கிறார். அவர் சைவம், பசங்க 2, தடம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவரும் மாறி, புதிதாக நட்சத்திரா நாகேஷ் மற்றும் கிருஷ்ணா இருவரும் நடித்தார்கள். இருப்பினும், கதையின் காரணமாக பின்னரும் கூட சீரியல் தொடர்ந்து நல்ல வரவேற்ப்பை பெற்று வந்தது.
TN Job “FB
Group” Join Now
இந்த தொடரில் அனு கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை பிரதீபா. இவர் நாயகி தொடரில் வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியவர். சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் பிரதீபா தனது காதலரை இன்று திருமணம் செய்துள்ளார். குடும்பத்தினர் மத்தியில் மிகவும் சிறப்பாக திருமணம் நடந்து முடித்துள்ளது. தனது திருமணத்தில் எடுத்துள்ள புகைப்படங்களை இணையத்தில் பிரதீபா வெளியிட்டுள்ளார்.