ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய “சுந்தரி” சீரியல் கேபி – வைரலாகும் புகைப்படங்கள்!
சன் டிவியில் புதிதாக தொடங்கப்பட்டு ஹிட் சீரியல்களுக்கு டப் கொடுக்கும் “சுந்தரி” சீரியல் நாயகி கேப்ரியல்லாவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கருப்பாக இருந்தாலும் அவருடைய புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்குகள் வருகிறது.
சுந்தரி கேப்ரியல்லா:
திறமைக்கு அழகு முக்கியமில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாய், கிடைத்த வாய்ப்பில் தன்னுடைய முழு பங்களிப்பையும் கொடுத்து முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை கேப்ரியல்லா. டிக்டாக் என்ற சமூக வலைத்தளம் மூலமாக பல குடும்பங்கள் சிதறி போனாலும், திறமையான பலர் இந்த செயலி மூலமாக நடிப்புத்துறைக்கு வந்திருக்கின்றனர். அப்படி வந்தவர்களில் ஒருவர் தான் கேப்ரியல்லா. இவர் தற்போது TRP யில் மாஸ் காட்டும் சுந்தரி சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.
தெலுங்கு சீரியலில் அறிமுகமாகும் விஜய் டிவி நாயகன் – ரசிகர்கள் வாழ்த்து மழை!
கிராமத்து பெண்ணான சுந்தரி பல கனவுகளுடன் திருமணம் செய்ய, கருப்பாக இருப்பதால் அவருடைய கணவருக்கு பிடிக்காமல் இருக்கிறது. அதனால் அவர் வேறு பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருகிறார். இது தெரியாமல் இருந்த சுந்தரி ஒரு கட்டத்தில் உண்மையை தெரிந்து புரட்சி பெண்ணாக கிளம்பினார். கணவரின் இரண்டாவது மனைவியின் அலுவலகத்திலேயே வேலை பார்க்க அது கணவர் கார்த்திக்கு பிடிக்காமல் இருக்கிறது.
Exams Daily Mobile App Download
தற்போது அந்த கம்பெனி CEOவாக சுந்தரி இருக்க அதனால் தன்னுடைய கிராமத்து பெண் தோற்றத்தை மாற்றி மாடல் லுக்கில் நடித்து வருகிறார். கிராமத்து சுந்தரியை விட மாடல் சுந்தரிக்கு தான் அதிக மவுசு இருக்கிறது. இந்நிலையில் கேப்ரியல்லா சீரியலை தவிர்த்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பல புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிடுவார். அந்த வகையில் அவர் தனது வீட்டு மொட்டை மாடியில் சிம்பிள் மேக்கப்பில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் மிகவும் அழகாக இருப்பதாக பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.