Emotional-ஆக நடந்த சன் டிவி செவ்வந்தி சீரியல் நாயகியின் வளைகாப்பு – வைரலாகும் புகைப்படங்கள்!
சன் டிவி செவ்வந்தி சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை திவ்யா ஸ்ரீதர் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில், சீரியல் குழுவினர் அவருக்கு வளைகாப்பு நடத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை வளைகாப்பு
தமிழ் சின்னத்திரையில் சன் டிவி சீரியல் நடிகர் நடிகைகளுக்கு தனிப்பட்ட முறையில் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் செவ்வந்தி சீரியல் மூலமாக பலரது மனதை கவர்ந்த நடிகை தான் திவ்யா ஸ்ரீதர். அவருடைய வாழ்க்கையில் பல கஷ்டங்கள் அரங்கேறி இருக்கிறது. விஜய் டிவியில் நடிக்கும் பிரபல சீரியல் நடிகர் அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், அவரால் ஏகப்பட்ட பிரச்சனைகள் திவ்யாவுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் போலீஸ் கேஸ் என அவர் வாழ்க்கையில் கஷ்டங்களுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் திவ்யா தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார். அவருக்கு ஏற்கனவே சின்னத்திரை நடிகர், நடிகைகள் சேர்ந்து வளைகாப்பு நடத்திய நிலையில், தற்போது செவ்வந்தி சீரியல் குழுவினர் சார்பில் வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளது. அதில் அவர் மிகவும் சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் விடுகிறார். அந்த அழகான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் திவ்யாவிற்கு நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டும் என பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.