அடக்கடவுளே.. இதுக்கு அப்புறம் விஜய் டிவி நிலைமை கஷ்டம் தான் – மாஸ் காட்டிய சன் டிவி சீரியல்கள்!

0
அடக்கடவுளே.. இதுக்கு அப்புறம் விஜய் டிவி நிலைமை கஷ்டம் தான் - மாஸ் காட்டிய சன் டிவி சீரியல்கள்!
அடக்கடவுளே.. இதுக்கு அப்புறம் விஜய் டிவி நிலைமை கஷ்டம் தான் - மாஸ் காட்டிய சன் டிவி சீரியல்கள்!
அடக்கடவுளே.. இதுக்கு அப்புறம் விஜய் டிவி நிலைமை கஷ்டம் தான் – மாஸ் காட்டிய சன் டிவி சீரியல்கள்!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி, சன் டிவி என பல முன்னணி சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் இந்த வார TRP ரேட்டிங்கில் சன் டிவி சீரியல்கள் டாப் 5 இடத்தை பிடித்துள்ளது.

TRP பட்டியல்:

தமிழ் பேசும் மக்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படும் சேனல்களாக சன் டிவியும், விஜய் டிவியும் இருக்கிறது. அதில் ஒளிபரப்பாகி வரும் ப்ரைம் டைம் சீரியல்கள் TRPயில் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றன. வாரம் வாரம் TRP போட்டியில் விஜய் டிவி மற்றும் சன் டிவி சீரியல்கள் தான் முதல் 5 இடங்களை பிடிக்கும். அந்த வகையில் இந்த வாரத்திற்கான TRP பட்டியல் குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது. அதில் விஜய் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளி சன் டிவி சீரியல்கள் முதல் 5 இடங்களை ஆக்கிரமித்து இருக்கிறது.

அதன் படி வழக்கமாக TRPயில் முதலிடத்தில் இருக்கும் சன் டிவி கயல் சீரியல், இந்த வாரமும் முதலிடத்தை பிடித்துள்ளது. அதற்கு அடுத்து இரண்டாவது இடத்தை அண்ணன் தங்கையின் பாச பிணைப்பை கதையாக சொல்லும் வானத்தை போல சீரியல் பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து மூன்றாவது இடத்தையும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் பிடித்துள்ளது. மேலும் நான்காவது இடம் கண்ணான கண்ணே சீரியலுக்கு கிடைத்துள்ளது.

பலரது எதிர்ப்புக்கு மத்தியில் முடிந்த கோபி – ராதிகாவின் திருமணம் – பாக்கியலட்சுமி லேட்டஸ்ட் அப்டேட்!

Exams Daily Mobile App Download

எப்போதும் முதல் மூன்று இடங்களில் வரும் சன் டிவி ரோஜா சீரியல் இந்த வாரம் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது. அதன் பின் ஆறாம் இடத்தில் தான் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் இருக்கிறது. ஏழாம் இடத்தை மீண்டும் சன் டிவி சீரியலான எதிர்நீச்சல் பிடித்துள்ளது. எட்டாம் இடத்தை, இல்லத்தரசிகளின் கதையான விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் பிடித்துள்ளது. ஒன்பதாம் இடத்தை ராஜா ராணி 2 சீரியலும், பத்தாம் இடத்தை விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் பிடித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here