சன் டிவி ‘ரோஜா’ சீரியல் நடிகை ஷாமிலிக்கு பிறந்த ஆண் குழந்தை – ரசிகர்கள் வாழ்த்து!

0
சன் டிவி 'ரோஜா' சீரியல் நடிகை ஷாமிலிக்கு பிறந்த ஆண் குழந்தை - ரசிகர்கள் வாழ்த்து!
சன் டிவி 'ரோஜா' சீரியல் நடிகை ஷாமிலிக்கு பிறந்த ஆண் குழந்தை - ரசிகர்கள் வாழ்த்து!
சன் டிவி ‘ரோஜா’ சீரியல் நடிகை ஷாமிலிக்கு பிறந்த ஆண் குழந்தை – ரசிகர்கள் வாழ்த்து!

சன் டிவியின் ‘ரோஜா’ என்ற சூப்பர் ஹிட் சீரியலில் நடித்து வந்த நடிகை ஷாமிலி கர்ப்பமாக இருந்த நிலையில் இவருக்கு தற்சயமம் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த தகவலை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள நடிகைக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை ஷாமிலி

தமிழ் சின்னத்திரை தொடர்களில் முன்னணி இடத்தை வகித்திருக்கும் ஒரு முக்கியமான சீரியல் ‘ரோஜா’. மக்களின் மனம் கவர்ந்த இந்த ‘ரோஜா’ சீரியல் சமீபத்தில் தான் 1000 எபிசோடுகளை கடந்து புதிய சாதனையை நிகழ்த்தி இருந்தது. அந்த வகையில் அடிதடி, கலகலப்பு, ரொமான்ஸ் என அனைத்து பிரிவுகளிலும் கலக்கி வரும் இந்த சீரியல் மக்களின் விருப்பமான சீரியலாக இருந்து வருகிறது. தவிர ‘ரோஜா’ சீரியல் ஒவ்வொரு வார இறுதியிலும் TRP ரேட்டிங்கில் முதன்மையான இடத்தையும் பிடித்து வருகிறது.

கண்ணனுடன் மீண்டும் இணைந்த “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஐஸ்வர்யா – வீடியோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

இப்படிப்பட்ட சிறப்பானதொரு சீரியலில் அனு என்ற கதாப்பாத்திரத்தில் முக்கிய வில்லியாக நடித்து வந்தவர் தான் நடிகை ஷாமிலி. பல்வேறு சின்னத்திரை தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் நடிகை ஷாமிலி ‘ரோஜா’ சீரியல் மூலம் சிறந்த வில்லியாகவும் அறியப்பட்டவர். இத்தொடரில் பல மாதங்களாக பயணித்து வந்த நடிகை ஷாமிலி, கர்ப்பமானதை தொடர்ந்து சமீபத்தில் இந்த சீரியலை விட்டு விலகினார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – அகிலுடன் இணைந்த ஹேமா!

தொடர்ந்து குழந்தை பிறப்பில் கவனம் செலுத்தி வந்த நடிகை ஷாமிலி, அவ்வப்போது கர்ப்பகால போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். இந்நிலையில் நடிகை ஷாமிலிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த குழந்தையின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை ஷாமிலிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!