பெண் குழந்தைக்கு தாயான சன் டிவி சீரியல் நடிகை – அவரே வெளியிட்ட பதிவு! ரசிகர்கள் வாழ்த்து!

0
பெண் குழந்தைக்கு தாயான சன் டிவி சீரியல் நடிகை - அவரே வெளியிட்ட பதிவு! ரசிகர்கள் வாழ்த்து!
பெண் குழந்தைக்கு தாயான சன் டிவி சீரியல் நடிகை - அவரே வெளியிட்ட பதிவு! ரசிகர்கள் வாழ்த்து!
பெண் குழந்தைக்கு தாயான சன் டிவி சீரியல் நடிகை – அவரே வெளியிட்ட பதிவு! ரசிகர்கள் வாழ்த்து!

சன் டிவியில் முன்னணி இயக்குனர் திருமுருகனின் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் சீரியலான “கல்யாண வீடு” சீரியலில், கதாநாயகியாக நடித்து பிரபலமான ஸ்பூர்த்தி கவுடாவிற்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது.

நடிகை ஸ்பூர்த்தி கவுடா:

அந்த காலம் முதல் சீரியலுக்கு பெயர் போன சேனல் தான் சன் டிவி. இந்நிலையில் இந்த சேனலில் கின்னஸ் ரெக்கார்ட் படைத்த நாதஸ்வரம் சீரியலை இயக்கியவர் தான் இயக்குனர் திருமுருகன். அவர் மெட்டிஒலி, நாதஸ்வரம் என வெற்றிகரமான சீரியல்களை இயக்கி இருந்த நிலையில், அதன் பின் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான திரு பிக்சர்ஸ் மூலம் கல்யாண வீடு என்ற புது சீரியலை இயக்கி வந்தார்.

யாரும் எதிர்பாராத வகையில் விரைவில் முடிவடையவுள்ள டாப் சீரியல் – ரசிகர்கள் ஷாக்!

Exams Daily Mobile App Download

இந்த சீரியல் பல இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியலாக இருந்தது. இந்த சீரியலில் ஹீரோவாக இயக்குனர் திருமுருகன் நடித்த நிலையில், அவருக்கு ஜோடியாக சூர்யா என்ற கேரக்டரில் ஸ்பூர்த்தி கவுடா நடித்தார். இந்த சீரியல் 650 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடியது. இந்நிலையில் ஸ்பூர்த்தி கவுடா, திருமணம் காரணமாக அந்த சீரியலை விட்டு விலகினார். அதன் பின் அவர் சீரியலில் தொடர்ந்து நடிக்கவில்லை.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

தன்னுடைய குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்த அவர் சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்தை ஷேர் செய்து இருந்தார். இந்நிலையில் அவருக்கு நேற்று முன்தினம் குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும், அந்த குழந்தையின் அழகான கால்களின் புகைப்படத்தை அவர் ஷேர் செய்து இருந்தார். அந்த பதிவில் ஏகப்பட்ட ரசிகர்களும் சின்னத்திரை பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!