சன் டிவி “ரோஜா” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – வைரலாகும் ப்ரோமோ!

0
சன் டிவி
சன் டிவி "ரோஜா" சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் - வைரலாகும் ப்ரோமோ!
சன் டிவி “ரோஜா” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – வைரலாகும் ப்ரோமோ!

சன் டிவி “ரோஜா” சீரியலில் பல எதிர்பாராத திருப்பங்கள் வர இருக்கிறது. ரோஜா மற்றும் அனுவிற்கு பிறந்தநாள் விழா கொண்டாட இருக்கும் நிலையில் அதில் அர்ஜுன் புதிதாக திட்டம் ஒன்றை தீட்டுகிறார். அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

ரோஜா சீரியல் ப்ரோமோ:

ரோஜா சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் அர்ஜுன் ரோஜா தான் குடும்பத்தின் வாரிசு என்பதை கண்டுபிடிக்க பல முயற்சிகளை செய்கிறார். ஆனாலும் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறது. இதற்கிடையில் புதிதாக வில்லி ஒருவர் வந்திருக்கிறார். அனு ரோஜா இருவரும் சிறுவயதாக இருக்கும்போது கொலை குற்றவாளிக்கு எதிரான சாட்சி சொல்லிவிடுகின்றனர். இப்போது 20 வருடங்கள் கழித்து அவர் இருவரையும் பழிவாங்க வருகிறார் அந்த வில்லி.

‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம் – வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் வாழ்த்து!

அதனால் அர்ஜுன் அந்த வில்லியிடம் இருந்து ரோஜாவை காப்பாற்றி அவளுக்கு பதிலாக அனுவை பலிகடா ஆக்க முடிவு செய்துவிட்டார். இதை தெரியாத அனு இப்போது வீட்டில் ஜாலியாக சுற்றிக்கொண்டிருக்கிறார். இந்நிலையில், இன்றைய எபிசோடுக்கான ப்ரமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், அனு ரோஜா இருவருக்கும் பர்த்தேட பங்ஷன் ஏற்பாடு செய்துள்ள அர்ஜூன் வில்லிக்கு அழைப்பிதற்கு அனுப்புகிறார். ஆனால் அர்ஜூனின் மாஸ்டர் ப்ளானை தெரிந்துகொண்ட வில்லி உஷாராக மாறுகிறார்.

ப்ரமோவிலேயே அர்ஜூனின் சூட்சமத்தை வில்லி புரிந்து கொண்டது போன்ற காட்சிகள் உள்ளதால், அடுத்து வரும் எபிசோடுகளில் சுவாரசியம் அதிகமாக இருப்பதாக தெரிகிறது. இந்த சீரியல் பல எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில், அர்ஜுன் வெற்றி பெறுவாரா என்பது இந்த சீரியலின் இறுதிக்கட்டமாக இருக்கப் போகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here