சன் டிவி ‘ரோஜா’ சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் பூஜா – வெளியான புகைப்படம்!
சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘ரோஜா’ சீரியலில் பூஜா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஸ்மிருதி தற்போது மீண்டும் களமிறங்க இருப்பதாக சமீபத்திய படப்பிடிப்பு புகைப்படம் வெளியாகியுள்ளது.
ரோஜா சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பப்படும் ‘ரோஜா’ சீரியல் TRP கிங்காக கருதப்படுகிறது. ஏனென்றால் விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் சூப்பர் ஹிட் சீரியல்களை கூட முந்தும் அளவுக்கு ரோஜா சீரியலின் வியூஸ் அதிகமாகும். அந்த வகையில் தமிழ் மொழியில் ஒவ்வொரு வாரமும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் அனைத்து வகையான தொலைக்காட்சி சீரியல்களிலும் ரோஜா சீரியலின் TRP ரேட்டிங்க், ஒரு சில வாரங்களை தவிர எப்போதும் முதலிடத்தை பிடித்து வருகிறது.
ஜீ தமிழ் ‘சித்திரம் பேசுதடி’ சீரியல் ஜோடிக்கு விரைவில் திருமணம் – ரசிகர்கள் வாழ்த்து!
இந்த ‘ரோஜா’ தொடர் தற்போது ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. அதாவது ரோஜாவின் உண்மையான அம்மா யார் என்கிற தருணம் அடுத்து வரும் எபிசோடுகளில் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் இத்தொடரில் பூஜா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஸ்மிருதி நீண்ட நாட்களுக்கு பிறகு சீரியலில் தோன்ற இருக்கிறார். அதாவது கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் எபிசோடுகளில் அஷ்வின் மற்றும் பூஜா சம்பந்தமான காட்சிகள் எதுவும் வெளியாகவில்லை.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ பழைய ஐஸ்வர்யாவின் தன்னம்பிக்கை கருத்து – விஜெ தீபிகா ஓபன் டாக்!
இந்த நிலையில், நடிகை ஸ்மிருதி மீண்டுமாக ‘ரோஜா’ சீரியலில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை உறுதி செய்யும் விதத்தில் ரோஜா சீரியலின் படப்பிடிப்பு தளத்தில் ஸ்மிருதி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வகையில் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த அஷ்வின் – பூஜா சம்பந்தப்பட்ட காட்சிகள் வரும் வார எபிசோடுகளில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.