சன் டிவி “ரோஜா” சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. இதுதான் கிளைமாக்ஸ் – வெளியான சூப்பர் அப்டேட்!

0
சன் டிவி
சன் டிவி "ரோஜா" சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. இதுதான் கிளைமாக்ஸ் - வெளியான சூப்பர் அப்டேட்!
சன் டிவி “ரோஜா” சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. இதுதான் கிளைமாக்ஸ் – வெளியான சூப்பர் அப்டேட்!

சன் டிவியில் டாப் சீரியலான “ரோஜா” சீரியலின் கிளைமேக்ஸ் காட்சிகள் வந்துவிட்டது. அதாவது ரோஜாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. விரைவில் இந்த சீரியல் முடிவுக்கு வர இருப்பதால் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர்.

ரோஜா சீரியல்:

தமிழ் சின்னத்திரையில் வெற்றி சீரியலாக 1000 எபிசோடுகளை கடந்து சன் டிவி ரோஜா சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் பல முறை முடிவுக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில், ஆனால் ரசிகர்களின் கோரிக்கைக்கு இணங்க கதையில் புதிய புதிய திருப்பங்கள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் இந்த சீரியல் விரைவில் முடிய இருப்பதாக தற்போது உறுதியான தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இன்றைய எபிசோடில் ரோஜாவிற்கு குழந்தை பிறந்துள்ளது.

அசிமை டார்கெட் செய்த ஹவுஸ்மெட்ஸ்.. கமல் சார் தீர்ப்பு என்ன? வெளியான “பிக்பாஸ்” ப்ரோமோ!

Exams Daily Mobile App Download

அதுவும் ஆண் குழந்தை பிறந்துள்ளதால் குட்டி அர்ஜுன் வந்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். மேலும் ரோஜாவும் அர்ஜுனும் குழந்தையுடன் வீட்டிற்கு வருவது போல இன்றைய எபிசோட் முடிவடைந்துள்ளது. அது மட்டுமில்லாமல் இனி வரும் எபிசோடுகளில் ரோஜாவின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவும் நடைபெற இருக்கிறது. ரோஜா சீரியல் முடிய கூடாது என சமூக வலைத்தளங்களில் ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வந்தாலும், இன்னும் சில எபிசோடுகளில் ரோஜா சீரியல் நல்ல ஒரு கிளைமேக்ஸ் காட்சியுடன் முடிய இருப்பதாக தகவல் வெளியாகி, ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது.கண்டிப்பாக இந்த சீரியலில் மெயின் வில்லியாக காட்டப்படும் அனு மனம் திருந்துவது போல கிளைமாக்ஸ் காட்சி இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!