சன் டிவியில் என்ட்ரி கொடுக்கும் செம்பருத்தி ஷபானா – டைட்டில் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

0
சன் டிவியில் என்ட்ரி கொடுக்கும் செம்பருத்தி ஷபானா - டைட்டில் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
சன் டிவியில் என்ட்ரி கொடுக்கும் செம்பருத்தி ஷபானா - டைட்டில் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
சன் டிவியில் என்ட்ரி கொடுக்கும் செம்பருத்தி ஷபானா – டைட்டில் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

ஜீ தமிழில் செம்பருத்தி சீரியல் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த நடிகை ஷபானா, தற்போது சன் டிவியில் புதிய சீரியலில் கமிட்டாகி இருக்கிறார். மேலும் அந்த சீரியலின் டைட்டிலே புதுமையாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

நடிகை ஷபானா:

தமிழ் சின்னத்திரையில் புது முக நடிகையாக முதன்முதலில் ஜீ தமிழ் செம்பருத்தி சீரியலில் அறிமுகமானவர் நடிகை ஷபானா. அதில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்தவர். 1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பான அந்த சீரியல் சில மாதங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது. அதன் பின் ஷபானா தனது காதலர் ஆர்யனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் எந்த சீரியலிலும் அவர் கமிட்டாகாமல் இருந்தார்.

வீட்டு வேலைகளை தனியாக செய்யும் மீனா, வருத்தப்பட்டு உதவி செய்யும் ஜீவா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

இந்நிலையில் ஷபானா சன் டிவியில் புது சீரியல் ஒன்றில் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். அது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில், சீரியலின் மையக் கருத்தே புதுமையாக இருப்பதால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து இருக்கிறது. அது மட்டுமில்லாமல் அந்த சீரியலின் டைட்டில் “மிஸ்டர் மனைவி” என புதுமையாக வைக்கப்பட்டுள்ளதால், கதை முழுவதும் ஷபானாவை மையமாக வைத்து எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ப்ரோமோ பார்த்த ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால் இந்த சீரியல் எந்த அளவிற்கு ஹிட்டாகும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!