பெண் குழந்தையை பெற்றெடுத்த ‘சன் டிவி’ சீரியல் நடிகை நீலிமா ராணி – ரசிகர்கள் வாழ்த்து மழை!
சின்னத்திரை நடிகை நீலிமா 2ம் முறையாக கர்ப்பமாக இருந்த நிலையில், சமீபத்தில் மீண்டும் ஒரு அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் நீலிமாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நீலிமா இசை:
சின்னத்திரையில் சிறு வயது முதல் நடித்து வரும் நடிகைகள் சிலர் உள்ளனர். அந்த வகையில் நடிகை நீலிமா குழந்தை பருவம் முதல் தற்போது வரை வெள்ளித்திரை, சின்னத்திரை என்று தனது திறமையை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். இவர் நடித்துள்ள கதாபாத்திரங்கள் அனைத்திலும் மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளது. குழந்தை பருவத்தில் இவர் நடித்துள்ளதன் மூலமாக தான் சீரியல் வாய்ப்புகளையும் பெற்றுள்ளார். சின்னத்திரையில் மெட்டிஒலி, தாமரை, அரண்மனைக்கிளி போன்ற பல வெற்றி தொடர்களில் நடித்துள்ளார்.
தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை – முக்கிய அறிவிப்பு!
அது மட்டுமில்லாமல் இவர் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்துள்ளது. ஜீ தமிழில் என்றென்றும் புன்னகை சீரியல் பிற்பகலில் ஒளிபரப்பாகி வருகிறது. அதனை நீலிமா தான் தயாரிக்கிறார். நீலிமா இசைவாணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு முன்னதாக ஒரு பெண் குழந்தை உள்ளது. சில மாதங்களுக்கு முன்பாக நீலிமா மீண்டும் 2ம் முறையாக தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். நீலிமா தனியாக ஒரு யூடுயூப் சேனலை நடத்தி வருகிறார். அதில், பயனுள்ள பல வீடியோக்களையும் பதிவு செய்து வருகிறார்.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
இவர் தனது கர்ப்ப காலத்தில் நடத்திய பல விதமான போட்டோ ஷூட்களும் மிகவும் அதிகமாக பரவி வந்தது. மிகவும் பயனுள்ளதாக தனது கர்ப்ப காலத்தை மாற்றிக் கொண்டதாக நீலிமா அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது தனது சமூக வலைப்பக்கத்தில் கடந்த ஜனவரி 5ம் தேதி தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதில் தங்கள் குடும்பத்திற்கு மீண்டும் அழகிய தேவை வந்துள்ளதாகவும், அதனால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இவரின் பதிவை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.