சன் டிவி ‘மாஸ்டர் செப்’ நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் இவர் தான்? முடிவுக்கு வரும் ஷோ!
சன் டிவியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று வந்த ‘மாஸ்டர் செப்’ சமையல் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் இதில் வெற்றி வாகை சூட இருக்கும் போட்டியாளர் யார் என்கிற விவரம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
மாஸ்டர் செப்
உலகளவில் முதன்மை சமையல் நிகழ்ச்சிகளில் ஒன்றாக கருதப்படும் ‘மாஸ்டர் செப்’ நிகழ்ச்சி பல்வேறு உலக நாடுகளில் பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த அளவுக்கு சிறப்பு மிக்க இந்த ‘மாஸ்டர் செப்’ நிகழ்ச்சி இந்த ஆண்டு முதன் முதலாக தென் இந்திய மொழிகளில் தயாரிக்கப்பட்டது. அந்த வகையில் சமையல் நிகழ்ச்சிக்கு பெயர் போன ‘மாஸ்டர் செப்’ இந்த ஆண்டில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 2 மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
நடிகர் ரஜினியின் “அண்ணாத்த” திரைப்படம் ரூ.200 கோடி வசூல்? உண்மை நிலவரம் என்ன?
இதில் தமிழ் ‘மாஸ்டர் செப்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளராக முன்னணி திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டு வருகிறார். அதே போல தெலுங்கு ‘மாஸ்டர் செப்’ நிகழ்ச்சியை நடிகை தமன்னா தொகுத்து வழங்கி வந்தார். அந்த வகையில் ‘மாஸ்டர் செப்’ நிகழ்ச்சிக்குரிய பிரமாண்டத்துடன் நடத்தப்பட்டு வரும் தமிழ் சமையல் நிகழ்ச்சியும் மக்களை பெரிதும் கவர்ந்திருந்தது. பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி TRP ரேட்டிங்கிலும் முன்னணி இடத்தை வகித்து வந்தது.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஐஸ்வர்யாவிற்காக ஆட்டோ ஓட்டும் கண்ணன் – அவரே வெளியிட்ட வீடியோ!
இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மொத்தம் 14 போட்டியாளர்கள் கலந்து கொண்டு வந்த நிலையில் இதுவரை 10 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அந்த வகையில் ‘மாஸ்டர் செப்’ நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தில் வின்னி, நித்யா, தேவகி மற்றும் கிருத்திகா ஆகிய 4 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் தேவகி என்பவர் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. என்றாலும் இந்த நிகழ்ச்சியின் இறுதி முடிவை அறிந்து கொள்ள வரும் வாரம் ஞாயிற்றுக்கிழமை வரை காத்திருக்க வேண்டியது அவசியமாகும்.