இந்த வார TRP ரேட்டிங்கில் முதல் இடம் பிடித்த சன் டிவி ‘கயல்’ – மற்ற சீரியல்களின் முழு பட்டியல் இதோ!

0
இந்த வார TRP ரேட்டிங்கில் முதல் இடம் பிடித்த சன் டிவி 'கயல்' - மற்ற சீரியல்களின் முழு பட்டியல் இதோ!
இந்த வார TRP ரேட்டிங்கில் முதல் இடம் பிடித்த சன் டிவி 'கயல்' - மற்ற சீரியல்களின் முழு பட்டியல் இதோ!
இந்த வார TRP ரேட்டிங்கில் முதல் இடம் பிடித்த சன் டிவி ‘கயல்’ – மற்ற சீரியல்களின் முழு பட்டியல் இதோ!

பிரபல சன் தொலைக்காட்சியில் இந்த வாரம் ஒளிபரப்பான சீரியல்களில் ‘கயல்’ வழக்கம் போல TRP ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் அடுத்தடுத்து இடம்பிடித்துள்ள சீரியல்களின் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

TRP ரேட்டிங்

இன்றைய கால கட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையுள்ள அனைத்து தரப்பு ரசிகர்களின் முக்கியமான பொழுதுபோக்காக இருந்து வருவது சீரியல்கள் தான். அந்த வகையில் தமிழ் மொழியில் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் குறிப்பிட்ட சில சேனல்களில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் தான் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது. அந்த வகையில் இப்போதுள்ள ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்றபடி ரொமான்ஸ், சண்டை காட்சிகளுடன் சினிமா பாணியில் எடுக்கப்பட்டு வரும் சன் டிவி சீரியல்கள் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

Exams Daily Mobile App Download

அதாவது, சமீப காலமாக தமிழ் சின்னத்திரையில் அதிக பட்ச பார்வையாளர்களின் கவனம் ஈர்த்து மொத்த TRP ரேட்டிங்கில் முன்னணி இடத்தை பிடித்து வரும் சீரியல்களில் பலவும் சன் டிவியில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் தான். அந்த வகையில் இந்த வாரம் வெளியான சீரியல்களில் மக்களின் கவனம் ஈர்த்து UR மதிப்பீடுகளில் முதல் 8 இடங்களை பிடித்துள்ள சீரியல்களின் விவரங்களை இப்போது காணலாம். இந்த பட்டியலில் 9.95 புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் இருப்பது கயல் சீரியல். இந்த சீரியல் ஒளிபரப்பான நாள் முதல் ரசிகர்களின் கவனம் பெற்று இப்போது வெற்றி நடைபோட்டு கொண்டிருக்கிறது.

ஐலா பாப்பாவை சமாளிக்க முடியாமல் திணறும் ஆலியா மானசா – வைரலாகும் வீடியோ!

அடுத்ததாக, சின்ராசு திருமணம் தொடர்பான கதைக்களத்தில் பல்வேறு திருப்பங்களுடன் வெளியான வானத்தைபோல சீரியல் 9.43 புள்ளிகளை பெற்று இந்த பட்டியலில் 2ம் இடத்தை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து, கண்ணான கண்ணே சீரியல் 8.89 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும், ரோஜா சீரியல் 8.71 புள்ளிகளுடன் 4ம் இடத்திலும், சுந்தரி சீரியல் சுமார் 8.66 புள்ளிகளுடன் 5ம் இடத்திலும் இருக்கிறது. இதை தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியல் 6.79 புள்ளிகள், அபியும் நானும் சீரியல் 5.33 புள்ளிகள் மற்றும் அன்பே வா சீரியல் 5.13 புள்ளிகளை பெற்று அடுத்தடுத்த இடத்தை வகித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!