சன் டிவி “கயல்” சீரியல் சைத்ரா ரெட்டி குழந்தைக்கு பெயர் சூட்டு விழா – ரசிகர்கள் வாழ்த்து!

0
சன் டிவி
சன் டிவி "கயல்" சீரியல் சைத்ரா ரெட்டி குழந்தைக்கு பெயர் சூட்டு விழா - ரசிகர்கள் வாழ்த்து!

சன் டிவி “கயல்” சீரியல் சைத்ரா ரெட்டி குழந்தைக்கு பெயர் சூட்டு விழா – ரசிகர்கள் வாழ்த்து!

சன் டிவியில் புதிதாக தொடங்கப்பட்டு வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் “கயல்” சீரியலில் நடித்து வரும் சைத்ரா ரெட்டியின் அக்கா மகளின் பெயர் சூட்டுவிழா வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் ஏகப்பட்ட ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றனர்.

நடிகை சைத்ரா ரெட்டி:

தமிழ் சின்னத்திரையில் வில்லியாக நெகடிவ் ரோலில் நடித்தவர் சைத்ரா ரெட்டி. அவர் முதன்முதலில் விஜய் டிவி கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலமாக அறிமுகமானார். அதன் பின் ஜீ தமிழ் யாரடி நீ மோகினி சீரியலில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து பல ரசிகர்களை கவர்ந்தார். இவ்வளவு அழகான வில்லியை யாருமே பாத்திருக்கமாட்டார்கள் அந்த அளவிற்கு திருமணத்திற்கு பின்னும் அழகில் குறையில்லாமல் நடித்து வருகிறார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை தம்பி, தங்கையுடன் வெளியிட்ட புகைப்படம் – இணையத்தில் வைரல்!

இந்நிலையில் இதுவரை வில்லியாக பார்த்த அவருக்கு சன் டிவியில் கயல் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் நடிகர் சஞ்சீவ் உடன் ஜோடி சேர்ந்து அவர் நடித்து வருகிறார். இந்த சீரியல் தொடங்கப்பட்டு ஒரே வாரத்தில் TRPயில் டாப் இடத்தை பிடித்துள்ளது. அதற்கு அந்த சீரியல் கதாநாயகி மற்றும் கதாநாயகனும் காரணம் என சொல்லலாம். இளசுகளை கொல்லை கொள்ளும் அழகில் சைத்ரா ரெட்டியை பார்க்க பல இளைஞர்களும் இந்த சீரியலை விரும்பி பார்க்கின்றனர்.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா ஹேமாவிற்கு நேர்ந்த பரிதாபம் – அவரே வெளியிட்ட வீடியோ!

நடுத்தர குடும்பத்து பெண்ணாக தனது குடுப்பத்திற்காக உழைக்கும் ஒருத்தியாக சைத்ரா நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சைத்ரா தற்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவருடைய அக்காவின் குழந்தையின் பெயர் சூட்டும் விழாவில் அவர் அழகாக கலந்து கொண்டிருக்கிறார். மேலும் அந்த வீடியோவை ஷேர் செய்து அதில் அனைவரும் ஆசிர்வாதம் செய்ய வேண்டும் என பதிவிட்டிருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!