அனைவருக்கும் ஷாக்.. சன் டிவி டாப் சீரியலை விட்டு விலகிய கதாநாயகன்.. காரணம் இதுவா?
சன் டிவியில் ஒவ்வொரு வாரமும் TRPயில் முதலிடத்தை பிடிக்கும் சீரியலான “கயல்” சீரியலில், ஹீரோவாக நடித்து வந்த நடிகர் சஞ்சீவ் சீரியலை விட்டு விலக இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்கான காரணம் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்,
நடிகர் சஞ்சீவ்:
தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் அதில் ஒரு சில சீரியல்கள் தான் மக்களுக்கு விருப்பமான சீரியல்களாக இருக்கின்றன. அந்த வகையில் சன் டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட கயல் சீரியல் TRPயில் தொடர்ந்து முதலிடத்தை பிடித்து வருகிறது. இந்த சீரியலில் ஹீரோவாக நடிகர் சஞ்சீவ் மற்றும் கதாநாயகியாக நடிகை சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். இருவருக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அதுவே இந்த சீரியல் வெற்றிக்கு முக்கிய காரணம் ஆகும்.
பிக் பாஸ் போட்டியாளருக்கு அளிக்கப்பட்ட லட்சக்கணக்கான சம்பளம் – இவ்வளவு பெரிய தொகையை தட்டி விட்டாரா!
Exams Daily Mobile App Download
இந்நிலையில் சன் டிவியில் புதிதாக “இனியா” சீரியல் தொடங்கப்பட இருக்கிறது. இந்த சீரியலில் நடிகை ஆலியா மானசா ஹீரோயினாக களமிறங்க இருக்கிறார். மக்களின் ஏகப்பட்ட எதிர்பார்ப்பை இந்த சீரியல் பிடித்துள்ளது. அந்த வகையில் இந்த சீரியலில் ஆலியாவிற்கு ஜோடியாக சஞ்சீவ் நடிக்க இருக்கிறார் என்ற உறுதியான தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் அவர் கயல் சீரியலை விட்டு விலகிவிடுவாரா என்ற பேச்சு எழுந்துள்ளது. அப்போது கயல் சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என ஏகப்பட்ட கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.