மீண்டும் விபத்தில் சிக்கிய சன் டிவி “கயல்” சீரியல் சைத்ரா – வைரலாகும் பதிவு! ரசிகர்கள் ஷாக்!

0
மீண்டும் விபத்தில் சிக்கிய சன் டிவி
மீண்டும் விபத்தில் சிக்கிய சன் டிவி "கயல்" சீரியல் சைத்ரா - வைரலாகும் பதிவு! ரசிகர்கள் ஷாக்!
மீண்டும் விபத்தில் சிக்கிய சன் டிவி “கயல்” சீரியல் சைத்ரா – வைரலாகும் பதிவு! ரசிகர்கள் ஷாக்!

சின்னத்திரையில் வில்லியாக நடித்து தற்போது சன் டிவி கயல் சீரியலில் கதாநாயகியாக கலக்கி வரும் நடிகை சைத்ரா ரெட்டி, படப்பிடிப்பின் போது அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்வார். அந்த வகையில் தற்போது அவருக்கு விபத்து ஏற்பட அதில் இருந்து குணமாக துணை நடிகை ஜானகி உதவி செய்த வீடியோ ஒன்றை சைத்ரா பகிர்ந்து இருக்கிறார்.

நடிகை சைத்ரா ரெட்டி:

தமிழ் சின்னத்திரை நடிகைகளில் தற்போது டாப் வரிசையில் இருப்பவர் நடிகை சைத்ரா ரெட்டி. அவர் ஜீ தமிழில் யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்து ஏகப்பட்ட மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவ்வளவு அழகான வில்லியை பார்த்ததுண்டா என சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் அவரை புகழ்ந்து வந்தனர். அந்த சீரியல் முடிந்த பின் அவர் சன் டிவியில் கயல் சீரியலில் என்ட்ரி கொடுத்தார். அதில் அவருக்கு ஜோடியாக நடிகர் சஞ்சீவ் நடித்து வருகிறார்.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் கயல் சீரியலில் குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் ஒரு நடுத்தர பெண்ணின் கஷ்டங்களை வெளிச்சம் போட்டு காட்டும் கயல் கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகிறார். அவர் சீரியல் படப்பிடிப்பில் பல ஆபத்தான காட்சிகளில் நடித்து அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்வார். சில மாதங்களுக்கு முன் கையில் காயத்துடன் அவர் வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வகையில் தற்போது அவருக்கு மீண்டும் ஒரு அடி பட்டு இருக்கிறது.

சன் டிவியில் புதிய சீரியல் அறிமுகம் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

அதில் காயம் ஏற்பட அவருக்கு துணையாக நடிகை ஜானகி காலில் துணி வைத்து ஒத்தடம் கொடுக்கிறார். அந்த வீடியோவை சைத்ரா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து அதில் தனது நன்றியை தெரிவித்து இருக்கிறார். அடிக்கடி விபத்தில் சிக்குவதால் சைத்ரா ரசிகர்கள் அவரை கவனமாக இருக்க சொல்லி கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் அவருடைய கடின உழைப்பை பார்த்து வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!