சன் டிவி “இனியா” சீரியலில் ஆலியாவிற்கு ஜோடி இவர் தான் – ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

0
சன் டிவி
சன் டிவி "இனியா" சீரியலில் ஆலியாவிற்கு ஜோடி இவர் தான் - ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
சன் டிவி “இனியா” சீரியலில் ஆலியாவிற்கு ஜோடி இவர் தான் – ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

சன் டிவியில் நடிகை ஆலியா புதிதாக நடித்து ஒளிபரப்பாக இருக்கும் “இனியா” சீரியலில், ஆலியாவிற்கு ஜோடியாக யார் களமிறங்க இருக்கிறார் என்ற உறுதியான தகவல் வெளியாகி இருக்கிறது.

இனியா சீரியல்:

சின்னத்திரையில் டாப் கதாநாயகிகளில் ஒருவராக இருக்கும் நடிகை ஆலியா மானசா, இரண்டாவது பிரசவம் காரணமாக நடிப்பில் இருந்து இடைவெளி எடுத்து இருந்தார். இந்நிலையில் அவர் நீண்ட மாதங்களுக்கு பின் சன் டிவியில் இனியா சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கிறார். ஏகப்பட்ட ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெற்றுள்ள இனியா சீரியல், சன் டிவியில் ப்ரைம் டைமில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

ஆனால் ப்ரோமோவில் கூட ஆலியாவிற்கு ஜோடியாக யார் நடிக்க இருக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. அந்த வகையில் தற்போது இனியா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜே ரிஷி நீண்ட நாட்களுக்கு பின் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் அவர் ஆலியாவிற்கு ஜோடியாக நடிக்கவில்லை என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. அப்போது ஆலியாவிற்கு யார் தான் ஜோடி? என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

தரமான Climax.. DNA Test முடிவால் கெஞ்சும் பாரதி.. யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுத்த கண்ணம்மா!

Exams Daily Mobile App Download

அதாவது ஆல்யாவிற்கு ஜோடியாக அவருடைய கணவர் சஞ்சீவ் நடிக்க இருக்கிறார் என்ற உறுதியான தகவல் வெளியாகி இருக்கிறது. இருவரும் விஜய் டிவி ராஜா ராணி சீரியலில் ஒன்றாக நடித்து காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இந்த ஜோடிக்கு இன்னும் மவுசு குறையாமல் இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் இந்த ஜோடியை சின்னத்திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!