சின்னத்திரை நடிகருடன் காதல் திருமணம்.. தேதி குறித்த சன் டிவியின் முன்னணி நடிகை – குவியும் வாழ்த்துக்கள்!

0
சின்னத்திரை நடிகருடன் காதல் திருமணம்.. தேதி குறித்த சன் டிவியின் முன்னணி நடிகை - குவியும் வாழ்த்துக்கள்!
சின்னத்திரை நடிகருடன் காதல் திருமணம்.. தேதி குறித்த சன் டிவியின் முன்னணி நடிகை – குவியும் வாழ்த்துக்கள்!

தமிழ் சின்னத்திரை நடிகர் நடிகைகள் பலர் காதலித்து திருமணம் செய்து கொள்ளும் செய்தி அடிக்கடி வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் சன் டிவியில் பல எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி முடிந்த சந்திரலேகா சீரியல் நடிகை ஸ்வேதா தனது காதல் திருமணம் குறித்து தெரிவித்துள்ளார்.

நடிகை திருமணம்:

சன் டிவியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி முடிந்தாலும் ஒரு சில சீரியல்களில் வந்த கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிடுகின்றனர். அந்த வகையில் சன் டிவியில் டாப் சீரியல்களில் ஒன்றாக இருந்த சந்திரலேகா சீரியலில் கதாநாயகியாக சந்திரா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை ஸ்வேதா. அவருடைய நடிப்பிற்கு தனி ரசிகர்கள் இருந்த நிலையில் தற்போது அந்த சீரியல் முடிவுக்கு வந்துள்ளது. ஆனாலும் இன்னும் சந்திராவாக அவர் மக்கள் மனதில் வாழ்ந்து வருகிறார்.

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில் அந்த சீரியலுக்கு பின் அவர் எந்த சீரியலிலும் கமிட் ஆகாமல் இருந்து வருகிறார். அவரை மீண்டும் சின்னத்திரையில் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வரும் இந்த நேரத்தில் அவர் தனது திருமணம் குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் தனது காதலரின் முகத்தை காட்டாமல் பதிவு வெளியிட்டார். ஆனால் தற்போது அவருடைய வருங்கால கணவருடன் திருமண தேதி குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

குட் நியூஸ்.. மீண்டும் சரிந்த தங்கத்தின் விலை – இரண்டு நாள் இதே நிலவரம் தான் – உடனே வாங்க கிளம்புங்க!

Exams Daily Mobile App Download

அவர் திருமணம் செய்து கொள்ள போவது மால்மருகா என்ற சின்னத்திரை நடிகரை தான் என்பது தெளிவாக தெரிகிறது. மேலும் அவர்களுக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை டிச. 4 ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. அது குறித்து அழகான பதிவு ஒன்றை அவர் வெளியிட்டு இருக்கிறார். இந்த அழகான ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!