சன் டிவி ‘கயல்’ சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி செய்த காரியம் – வைரலாகும் வீடியோ! குவியும் வாழ்த்துக்கள்!

0
சன் டிவி 'கயல்' சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி செய்த காரியம் - வைரலாகும் வீடியோ! குவியும் வாழ்த்துக்கள்!
சன் டிவி 'கயல்' சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி செய்த காரியம் - வைரலாகும் வீடியோ! குவியும் வாழ்த்துக்கள்!
சன் டிவி ‘கயல்’ சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி செய்த காரியம் – வைரலாகும் வீடியோ! குவியும் வாழ்த்துக்கள்!

சன் டிவி ‘கயல்’ சீரியலில் லீட் ரோலில் நடித்து வரும் நடிகை சைத்ரா ரெட்டி, மின்சாரத்தால் தாக்கப்பட்ட குழந்தையை காப்பாற்றுவதற்காக தூக்கிக்கொண்டு ஓடுவது போல வெளியாகி இருக்கும் படப்பிடிப்பு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை சைத்ரா ரெட்டி

ஜீ தமிழின் ‘யாரடி நீ மோகினி’ என்ற சீரியலில் பயங்கரமான வில்லியாக ஸ்வேதா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்களிடம் இருந்து ஏகப்பட்ட வரவேற்புகளை பெற்றிருந்தவர் நடிகை சைத்ரா ரெட்டி. முன்னணி தெலுங்கு சீரியல் நடிகையான சைத்ரா ரெட்டி அறிமுகமான முதல் சீரியல் மூலம் அதிகம் பேசப்பட்டவராக மாற, சன் டிவியில் ‘கயல்’ என்ற சீரியலில் பாசிட்டிவ் ஆன லீட் ரோலில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இந்த ‘கயல்’ சீரியலில் ஒட்டுமொத்த குடும்பத்தின் பாரத்தை சுமக்கும் மூத்த பெண்ணாக வரும் சைத்ரா ரெட்டிக்கு ஜோடியாக விஜய் டிவி ‘ராஜா ராணி’ புகழ் சஞ்சீவ் நடித்து வருகிறார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகிய அஞ்சலியின் புதிய நிகழ்ச்சி – ரசிகர்கள் உற்சாகம்!

இந்த ‘கயல்’ சீரியல் ஒளிபரப்பாகி வெறும் 100 எபிசோடுகளை மட்டுமே தாண்டி இருக்கும் நிலையில் மொத்த தமிழ் சீரியல்களிலும் நம்பர் 1 இடத்தை பிடித்து வருகிறது. அதுவும் இந்த சீரியல் வெளியாகி முதல் வார ரேட்டிங்கில் மட்டுமே எக்கச்சக்க பார்வையாளர்களின் கவனம் பெற்று முதல் இடத்தை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்க சின்னத்திரையில் வெற்றி நடை போட்டு வரும் ‘கயல்’ சீரியலில் சைத்ரா ரெட்டியின் நடிப்பு மக்களிடம் இருந்து பாராட்டுகளை பெற்று வருகிறது.

பாரதி கண்ணம்மா சீரியல் “அருண் பிரசாத்” யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

குறிப்பாக, வேற லெவல் டெடிகேஷனுடன் ‘கயல்’ சீரியலில் நடித்து வரும் சைத்ரா ரெட்டி, சமீபத்தில் கொட்டும் மழையில் நனைந்தபடி ஒரு இரவு முழுவதும் நடித்து தனது பங்களிப்பை கொடுத்திருந்தார். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரவலாக பேசப்பட்டு வந்தது. அதே போல தற்போது, மின்சாரம் தாக்கி நீரில் விழுந்து கிடைக்கும் சிறுமியை சைத்ரா ரெட்டி அதாவது, கயல் காப்பாற்றுவது போல சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இந்த காட்சியில் முகம் சுளிக்காமல் நீரில் இறங்கி சைத்ரா ரெட்டி அந்த குழந்தையை காப்பாற்றுவதற்கு ஓடுவது போல வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here