சன் டிவி “அன்பே வா” சீரியல் வில்லி சுப்புலட்சுமி ரங்கன் திடீர் விலகல் – ரசிகர்கள் அதிர்ச்சி!

0
சன் டிவி
சன் டிவி "அன்பே வா" சீரியல் வில்லி சுப்புலட்சுமி ரங்கன் திடீர் விலகல் - ரசிகர்கள் அதிர்ச்சி!
சன் டிவி “அன்பே வா” சீரியல் வில்லி சுப்புலட்சுமி ரங்கன் திடீர் விலகல் – ரசிகர்கள் அதிர்ச்சி!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி சீரியல்கள் பார்க்க தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில் முன்னணி சீரியலான அன்பே வா சீரியலில் இருந்து நடிகை சுப்புலட்சுமி ரங்கன் தற்போது விலகி இருப்பதாக அறிவித்துள்ளார்.

நடிகை சுப்புலக்ஷ்மி ரங்கன்:

சின்னத்திரை சீரியல்களுக்கு சினிமாவை விட ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். பல சீரியல்கள் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு எடுக்கப்படுவதால் தற்போது இளசுகள் முதல் பெரியவர்கள் வரை சீரியல்களை விரும்பி பார்க்கின்றனர். இந்நிலையில் சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அன்பே வா TRPயில் போட்டி போடும் சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. காதலுடன் த்ரில்லர் கதையம்சத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ராதிகா, கோபியின் திருமண வைபோகம் – மணக் கோலத்தில் கோபி! அதிர்ச்சிடைந்த பாக்கியா!

டெல்னா டேவிஸ், விராட், கன்யா பாரதி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியலில், தொடர் கொலை, போலீஸ் விசாரணை என்று பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இதில் வில்லி ஷில்பா வேடத்தில் நடிகை சுப்புலட்சுமி ரங்கன் நடித்து வருகிறார். சின்னத்திரையில் இருக்கும் டாப் வில்லிகளில் இவருக்கொரு தனி அங்கீகாரம் உள்ளது. இந்நிலையில் அவர் தற்போது அன்பே வா சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

மேலும் ஷில்பா கேரக்டரில், நடிக்க நடிகை நித்யா ராஜ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் என்றென்றும் புன்னகை என்ற தொடரில் நடித்து வரும் நித்யா ராஜ் சூர்யவம்சம், மற்றும் கலர்ஸ் தமிழின் எங்கவீட்டு மீனாட்சி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். சுப்புலக்ஷ்மி விலகியதற்கான காரணம் சரியாக தெரியாமல் இருக்கும் நிலையில் ரசிகர்கள் தற்போது வருத்தத்தில் இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here