பிரபல சீரியல் நடிகரை கரம் பிடிக்கும் சன் டிவி நடிகை சந்திரா – குவியும் வாழ்த்துக்கள்!

0
பிரபல சீரியல் நடிகரை கரம் பிடிக்கும் சன் டிவி நடிகை சந்திரா - குவியும் வாழ்த்துக்கள்!
பிரபல சீரியல் நடிகரை கரம் பிடிக்கும் சன் டிவி நடிகை சந்திரா - குவியும் வாழ்த்துக்கள்!
பிரபல சீரியல் நடிகரை கரம் பிடிக்கும் சன் டிவி நடிகை சந்திரா – குவியும் வாழ்த்துக்கள்!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கோலங்கள்’ என்ற சூப்பர் ஹிட் சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சந்திரா. இவர் மலையாள தொடரில் தன்னுடன் நடித்து வரும் நடிகரை திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்து, நிச்சயதார்த்த புகைப்படத்தை வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

நடிகை திருமணம்

கடந்த 2000களில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு முக்கியமான தொடர் ‘கோலங்கள்’. இந்த தொடரில் பிரபல திரைப்பட நடிகை தேவயானி, சீரியல் நடிகைகள் நீலிமா ராணி, தீபா வெங்கட், நளினி, நடிகர்கள் இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மக்களின் மனம் கவர்ந்த இந்த தொடருக்கு அந்த காலகட்டத்தில் பெரிய ரசிகர்கள் கூட்டமே இருந்தது. இந்த சீரியலில் கங்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே பிரபலமானவர் நடிகை சந்திரா லக்ஷ்மன்.

கண்ணனால் உயிருக்கு போராடும் லட்சுமி, பதட்டத்தில் குடும்பத்தினர் – பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்!!

இந்த தொடரை தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘காதலிக்க நேரமில்லை’ என்ற சீரியலிலும் நடிகர் ப்ரஜனுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த தொடருக்காக எழுதப்பட்ட ‘என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு’ பாடல் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் இவரை ஞாபகத்தில் வைத்திருக்கிறது. தற்போது மலையாள தொடர்களில் நடித்து வரும் நடிகை சந்திரா லக்ஷ்மன், தற்போது திருமணம் செய்ய இருப்பதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

அதாவது மலையாளத்தில் இவர் நடித்து வரும் ‘ஸ்வந்தம் சுஜாதா’ என்ற தொடரில் இவருக்கு ஜோடியாக நடித்து வரும் முன்னணி மலையாள தொடர் நடிகர் டோஸ் கிறிஸ்டி என்பவரை வெகு சீக்கிரத்தில் கரம் பிடிக்க உள்ளார். அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற தனது நிச்சயதார்த்த நிகழ்வில் இருவரும் கை கோர்த்தபடி இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!