சன் டிவியில் ப்ரைம் டைமில் களமிறங்கும் நடிகை ஆலியா மானசாவின் புது சீரியல் – ரசிகர்கள் உற்சாகம்!

0
சன் டிவியில் ப்ரைம் டைமில் களமிறங்கும் நடிகை ஆலியா மானசாவின் புது சீரியல் - ரசிகர்கள் உற்சாகம்!
சன் டிவியில் ப்ரைம் டைமில் களமிறங்கும் நடிகை ஆலியா மானசாவின் புது சீரியல் - ரசிகர்கள் உற்சாகம்!
சன் டிவியில் ப்ரைம் டைமில் களமிறங்கும் நடிகை ஆலியா மானசாவின் புது சீரியல் – ரசிகர்கள் உற்சாகம்!

தமிழ் சின்னத்திரையில் டாப் நடிகையாக இருந்து வந்த ஆலியா மானசா, தன்னுடைய இரண்டாவது பிரசவத்திற்கு பின் மீண்டும் புது சீரியலில் கமிட்டாகி இருக்கிறார். அந்த சீரியல் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.

புது சீரியல் அப்டேட்:

விஜய் டிவியில் வெற்றி சீரியலான ராஜா ராணி சீரியலில் கதாநாயகியாக அறிமுகமாகி, அதே சீரியலில் உடன் நடித்த நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் நடிகை ஆலியா மானசா. இருவரும் சின்னத்திரையில் பிரபலமான ஜோடியாக கலக்கி வந்தனர். இந்நிலையில் ஆலியா விஜய் டிவியில் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அந்த சீரியல் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருந்த நிலையில் அவர் இரண்டாவதாக கர்ப்பமாக இருந்த காரணத்தால் சீரியலை விட்டு விலகினார்.

Follow our Instagram for more Latest Updates

அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்த நிலையில், குழந்தையை பார்த்துக் கொள்வதால் சீரியலில் நடிக்காமல் சிறிது காலம் இடைவெளி எடுத்துக் கொண்டார். மேலும் குழந்தை பிறந்த பின் உடல் எடை அதிகமாகி முழுமையாக குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் புது சீரியலில் ஆலியா நடிக்க இருப்பதாகவும், அதற்காக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலை விட்டு விலகிய நடிகர் சதிஷ் – இனி புதிய கோபி இவர் தான்!

Exams Daily Mobile App Download

நேற்று முன்தினம் அவரின் புது சீரியல் பூஜை தொடங்கிய நிலையில், நேற்று முதல் படப்பிடிப்பு தொடங்கியது. அவர் எந்த சேனலில் நடிக்க இருக்கிறார் என்பது குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது. அதாவது அவர் சன் டிவியில் நடிக்க இருப்பதாகவும், அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கும் நடிகர் குறித்த தகவல் வெளியாகாமல் இருக்கிறது. மேலும் சரிகம ப்ரோடக்சன் கம்பெனி இந்த சீரியலை தயாரிக்க இருப்பதாகவும், இந்த சீரியலும் ப்ரைம் டைமில் தான் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் இந்த சீரியல் எப்போது ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!