சர்வதேச, தேசிய மாநாடுகள் – மே 2018

0

சர்வதேச, தேசிய மாநாடுகள் – மே 2018

இங்கு மே 2018 ல் நடைபெற்ற சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகள் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. TNPSC, UPSC, தேர்வுகளுக்கு தயாராவோர் நடப்பு நிகழ்வுகள் பகுதி வினாக்களுக்கு பதில் அளிக்க இது மிகவும் உதவியாக இருக்கும் என நம்புகிறோம்.

சர்வதேச மாநாடுகள்

இந்தியா ஜப்பான் இடையிலான 9 –வது எரிசக்திப் பேச்சுவார்த்தை

  • பொருளாதார வளர்ச்சிக்கு, நம்பகமான, தூய்மையான, குறைந்த செலவில் உற்பத்திச் செய்யப்படும் எரிசக்தி மிகவும் அத்தியாவசியமானது என்று இந்தியாவும் ஜப்பானும் ஒப்புக் கொண்டுள்ளன. புதுதில்லியில் 01.05.2018 நடைபெற்ற இந்தியா ஜப்பான் இடையிலான 9 –வது எரிசக்திப் பேச்சுவார்த்தைத் தொடர்பான கூட்டத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், பாதுகாப்பான, எளிதில் அணுகக் கூடிய எரிசக்தி வளம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டுமென்று, தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான், சீனா, தென்கொரியா 11-வது உச்சி மாநாடு

  • இந்த ஆண்டின் உச்சி மாநாடு மே 9-ம் தேதி டோக்கியோ நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் இந்த மாநாடு தற்போது நான்காவது முறையாக நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

15வது ஆசிய ஊடக உச்சிமாநாடு

  • 5வது ஆசிய ஊடக உச்சிமாநாட்டை (ஆஊஉ) புதுதில்லியில் உள்ள இந்திய மக்கள் தொடர்புகல்விக்கழகம் இந்திய ஒலிபரப்புப் பொறியியல் ஆலோசகர்கள் குழுமம் ஆகியவற்றுடன்இணைந்து செய்தி, மத்திய ஒலிபரப்பு அமைச்சகம் புதுதில்லியில் மே 10 முதல் 12 வரை நடத்தவிருக்கிறது.இந்தநிகழ்வை இந்தியா முதன்முறையாக நடத்துகிறது.மையக் கருத்து – “எங்கள் கதைகளைச் சொல்கிறோம் –ஆசியாவிலும் அதற்கு மேலும்”.

6 வது அமெரிக்க-இந்தியா விமானப்படை உச்சி மாநாடு

  • 6 வது அமெரிக்க-இந்தியா விமானப் போக்குவரத்து உச்சி மாநாடு மும்பையில் சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவால் முறையாகத் தொடங்கி வைக்கப்பட்டது.
  • இந்த சிவில் விமான போக்குவரத்து உச்சிமாநாட்டை விமானப்படை அமைச்சகம் மற்றும் அமெரிக்க வர்த்தக மேம்பாட்டு முகமை (யு.எஸ்.டி.டி.டீ) இணைந்து நடத்தும்.

மேலும் அறிய – கிளிக் செய்யவும்

தேசிய மாநாடுகள்

பெண் குழந்தையைக் காப்போம், கற்பிப்போம்” திட்டம்: தேசிய கருத்தரங்கு

  • “பெண் குழந்தையைக் காப்போம், பெண்குழந்தைக்கு கற்பிப்போம்” (Beti Bachao Beti Padhao) என்ற திட்டம் 244 மாவட்டங்களில் செயல்படுத்துவது தொடர்பாக தேசிய மாநாட்டை மத்திய மகளிர் நலம் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் புதுதில்லியில் (2018, மே 4) நடத்துகிறது.

எதிர்காலத்திற்கான, விரிவாற்றலுடைய மற்றும் டிஜிட்டல் மய உள்கட்டமைப்பு –  4 ஆவது பிராந்திய மாநாடு, பெங்களூர்

  • இந்தியத் தொழிற்துறைக் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் மத்திய அரசின் நிதி அமைச்சகமும், வளரும் நாடுகளுக்கான ஆய்வு மற்றும் தகவல் அமைப்பும் ஏற்பாடு செய்திருந்த எதிர்காலத்திற்கான, விரிவாற்றலுடைய மற்றும் டிஜிட்டல் மய உள்கட்டமைப்பு தொடர்பான 4 ஆவது பிராந்திய மாநாடு பெங்களூரில் 04.05.2018 நிறைவடைந்தது.

 பொலிவுரு நகரங்களின் முதன்மைச் செயல் அதிகாரிகள் பங்கேற்கும் முதலாவது உச்சி மாநாடு

  • போபாலில் மே 8, 2018 பொலிவுரு நகரங்களின் முதன்மைச் செயல் அதிகாரிகளுக்கான முதலாவது உச்சிமாநாட்டை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. ஹர்தீப் புரி தொடங்கி வைக்கிறார்.

மேலும் அறிய – கிளிக் செய்யவும்

தினசரி நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

முக்கிய நாட்கள் அறிய –கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!