தமிழக தொடக்க பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – கோடை விடுமுறை குறைப்பு! அறிவிப்பு வெளியீடு!

0
தமிழக தொடக்க பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு - கோடை விடுமுறை குறைப்பு! அறிவிப்பு வெளியீடு!
தமிழக தொடக்க பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு - கோடை விடுமுறை குறைப்பு! அறிவிப்பு வெளியீடு!
தமிழக தொடக்க பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – கோடை விடுமுறை குறைப்பு! அறிவிப்பு வெளியீடு!

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஆண்டு இறுதித் தேர்வுகள், மே 13ல் முடிந்தன. மே 14 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு, ஜூன் 12 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் தற்போது கோடை விடுமுறை திடீரென குறைக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கோடை விடுமுறை குறைப்பு:

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்பில் போதிய பாடத் திட்டங்களை நடந்த முடியாததால் மாணவர்களுக்கு சில பாடங்களை இந்த ஆண்டு தவிர்த்து குறுகிய பாடங்களை மட்டும் நடத்த அரசு திட்டமிட்டு இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. மேலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் கடந்த 5ம் தேதி முதல் ஆண்டு இறுதித் தேர்வுகள் தொடங்கி மே 13 உடன் நிறைவடைந்தது.

TN Job “FB  Group” Join Now

இதை அடுத்து மாணவர்களுக்கு மே 14 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. இந்நிலையில் பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்று மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த சமயத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் மாதம் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.மேலும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் மாதம் 27 ஆம் தேதியும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் மாதம் 20 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கோபியிடம் குடிக்க வேண்டாம் என கெஞ்சிய எழில், ராதிகாவை சமாதானம் செய்ய போகும் கோபி – இன்றைய எபிசோட்!

இந்நிலையில் முன்னதாக தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு, ஜூன் 12 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் தற்போது மற்றொரு அறிவிப்பு ஓன்று வெளியாகியுள்ளது. அதாவது ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு, கோடை விடுமுறை 5ம் தேதியுடன் முடிவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும், 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை, பள்ளிக்கல்வி துறை நடத்தும் எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்பில் பங்கேற்கும்படி, ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனர் சுதன் உத்தரவிட்டுள்ளார்.இந்த அறிவிப்புக்கு, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பள்ளி திறந்த பின் பயிற்சி வகுப்பை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here