ஏப்ரல் 24 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு முடிவு!

0
ஏப்ரல் 24 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு - மாநில அரசு முடிவு!
ஏப்ரல் 24 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு - மாநில அரசு முடிவு!
ஏப்ரல் 24 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு முடிவு!

தற்போது மாநிலம் முழுவதும் நிலவிக் கொண்டிருக்கும் வெப்பச் சலனம் காரணமாக சத்தீஸ்கரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை ஏப்ரல் 24 முதல் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

கோடை விடுமுறை

சமீப காலமாக காணப்பட்டு வரும் அதிகளவு வெப்பநிலை காரணமாக சத்தீஸ்கரில் உள்ள பள்ளிகள் கோடை விடுமுறைக்காக ஏப்ரல் 24 முதல் ஜூன் 14 வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கும் இந்த விடுமுறை காலம் பொருந்தும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. தொடர்ந்து பள்ளிகளுக்கான புதிய அமர்வு ஜூன் 15 முதல் துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ‘மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கான கோடை விடுமுறை ஏப்ரல் 24ம் தேதி முதல் தொடங்கும்.

TN TRB தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – TET பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்வது எப்படி?

விடுமுறை முடிந்ததும் புதிய கல்வி அமர்வு ஜூன் 15 முதல் தொடங்கும். மாநிலத்தில் அதிகரித்து வரும் வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு கோடை விடுமுறையை முன்கூட்டியே ஒத்திவைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே சில இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஏப்ரல் 25 ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

அதனால், மாணவர்கள் தானாக முன்வந்து திட்டமிடப்பட்ட தேதிகளில் தேர்வில் கலந்து கொள்ளலாம் என்று அரசு அறிவுறுத்தி இருக்கிறது. மற்றபடி, கோடை விடுமுறைக்காக ஏப்ரல் 24 முதல் ஜூன் 14 வரை பள்ளிகள் மூடப்பட்டிருக்கும். இதற்கிடையில், கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் சத்தீஸ்கரில் வெப்பநிலை 40 டிகிரியை தாண்டி பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த வாரத்தில் அம்மாநிலத்தில் சராசரியாக 42 டிகிரிக்கு மேல் பகல்நேர வெப்பநிலை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here