ஜூன் 15 வரை பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு – மாநில வாரியான முழு பட்டியல் இதோ!

0
ஜூன் 15 வரை பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு - மாநில வாரியான முழு பட்டியல் இதோ!
ஜூன் 15 வரை பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு - மாநில வாரியான முழு பட்டியல் இதோ!
ஜூன் 15 வரை பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு – மாநில வாரியான முழு பட்டியல் இதோ!

தற்போது கோடை காலம் துவங்கி இருப்பதால் உத்தரபிரதேசம் உள்ளிட்ட சில வடக்கு மாநிலங்களில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

கோடை விடுமுறை

கடந்த சில வாரங்களாக இந்தியாவில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பள்ளிகளுக்கான விடுமுறைகள் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் நேற்று (மே.20) முதல் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. இதற்கிடையில், அம்மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிகள் மே 20 முதல் ஜூன் 15 வரை கோடை விடுமுறையை அறிவிக்கவில்லை. அதே நேரத்தில், தலைநகர் டெல்லி மற்றும் ஹரியானாவில் உள்ள பள்ளிகளுக்கும் இன்னும் விடுமுறை அறிவிக்கப்படவில்லை.

Exams Daily Mobile App Download

அதன்படி, இந்த மாநிலங்களில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் கல்வி நடவடிக்கை தொடர்கிறது. என்றாலும், கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் டெல்லி மற்றும் ஹரியானாவில் பள்ளிகள் செயல்படும் நேரம் மாறியமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தற்போது சிபிஎஸ்இ போர்டு இரண்டாம் நிலை தேர்வுகள் நடந்து வருவதால், ஜூன் 1ம் தேதி முதல் இந்த இரு மாநிலங்களிலும் கோடை விடுமுறை அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இருந்தாலும், டெல்லியில் கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்க வேண்டும் என பெற்றோர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Degree முடித்தவரா நீங்கள் ? DELL நிறுவனத்தில் உங்களுக்கான வேலைவாய்ப்பு இதோ..!

இப்போது, டெல்லியில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் இயங்குகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில் ஜூன் 1ம் தேதி முதல் அதாவது, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 10ம் பருவ இரண்டு தேர்வுகள் முடிந்தவுடன் விடுமுறை தொடங்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் மே 24 ஆம் தேதியுடன் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் முடிவுக்கு வருவதால், தேர்வு முடிந்து சில நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என நம்பப்படுகிறது. இப்போது டெல்லியை ஒட்டியுள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தில் மே 20ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கியுள்ளது.

இம்முறை அரசு பள்ளிகளுக்கு 25 நாட்கள் மட்டுமே கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மே 20ம் தேதி முதல் அனைத்து அரசு பள்ளிகளும் மூடப்பட்டு, ஜூன் 16 முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது. இதற்கு முன்னதாக, உத்திர பிரதேசத்தில் குளிர்கால விடுமுறைகள் 25 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளன. இதனிடயே டெல்லியை ஒட்டியுள்ள குருகிராம், ஃபரிதாபாத், சோனிபட், பல்வால் உள்ளிட்ட ஹரியானா பகுதிகளில் கோடை விடுமுறை அறிவிக்கப்படவில்லை. ஆனால், தற்போது பள்ளிகள் அனைத்தும் புதிய நேரத்துடன் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here