பள்ளி மாணவர்களுக்கு 51 நாட்கள் கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

0
பள்ளி மாணவர்களுக்கு 51 நாட்கள் கோடை விடுமுறை - மாநில அரசு அறிவிப்பு!
பள்ளி மாணவர்களுக்கு 51 நாட்கள் கோடை விடுமுறை - மாநில அரசு அறிவிப்பு!
பள்ளி மாணவர்களுக்கு 51 நாட்கள் கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

வெப்பச்சலனம் காரணமாக மாநிலங்கள் கோடை விடுமுறையை முன்கூட்டியே அறிவித்துள்ளன. இந்நிலையில் UP மாணவர்களுக்கு 51 நாட்கள் கோடை விடுமுறை மற்றும் டெல்லி பள்ளிகளுக்கு ஜூன் 18 முதல் 28 வரை கோடை விடுமுறை என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மாநில அரசு அறிவிப்பு:

நாடு முழுவதும், கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு பொதுத்தேர்வும் நடைபெற்று வருகிறது. இருப்பினும் கோடை வெயில் வெளுத்து வாங்குவதால் பல மாநிலங்களில் கோடை விடுமுறை குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தில், பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறைகள் மே 21 முதல் ஜூன் 30 வரை அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பள்ளி நேரத்தில் மாற்றங்களைச் செய்துள்ளனர்.

TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – இதெற்கெல்லாம் தடை!

இதையடுத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாநிலங்கள் கோடை விடுமுறையை முன்கூட்டியே அறிவித்துள்ள நிலையில், டெல்லி பள்ளிகள் ஜூன் 18 முதல் 28 வரை கோடை விடுமுறையைத் தொடங்கும் என்று டெல்லி கல்வி இயக்குநரகம் (DoE) அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால், மாணவர்களிடம் கற்றல் பற்றாக்குறை ஏற்பட்டது. இதை ஈடுசெய்ய டெல்லி பள்ளிகளில் கோடைகால வகுப்புகள் அவசியம் என்று DoE அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக, டெல்லி பள்ளிகளுக்கு இன்று முதல் ஜூன் 28, 2022 வரை விடுமுறை அளிக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

மறுபுறம், மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற சில மாநிலங்கள் மே முதல் வாரத்தில் இருந்து பள்ளி கோடை விடுமுறையைத் தொடங்கியுள்ளன. இதற்கிடையில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதால், யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. நொய்டா, காசியாபாத், மீரட், ஹாபூர், புலந்த்ஷாஹர், பாக்பத் மற்றும் லக்னோவில் உள்ள பள்ளிகளில் உள்ள அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here