ஜூன் 30 வரை கல்லூரிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிப்பு – அரசு அறிவிப்பு!

0
ஜூன் 30 வரை கல்லூரிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிப்பு - அரசு அறிவிப்பு!
ஜூன் 30 வரை கல்லூரிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிப்பு - அரசு அறிவிப்பு!
ஜூன் 30 வரை கல்லூரிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிப்பு – அரசு அறிவிப்பு!

ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் வரும் ஜூன் மாதம் 10ம் தேதி முதல் 30ம் தேதி வரை சுமார் 21 நாட்களுக்கு கோடை விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

கோடை விடுமுறை

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான கோடை விடுமுறைகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள கல்லூரிகளுக்கு 21 நாட்கள் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜம்மு காஷ்மீரில் தற்போது நிலவும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக சுமார் 21 நாட்களுக்கு கோடை விடுமுறை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அனைத்து கல்லூரிகளுக்கும் ஜூன் 6 அன்று கோடை விடுமுறையை அறிவித்துள்ளது.

தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

இதை தொடர்ந்து ஜம்மு பிராந்தியத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும் ஜூன் 10, 2022 முதல் விடுமுறைக்காக மூடப்படும். இது குறித்து அரசாங்கத்தின் உயர்கல்வி முதன்மைச் செயலாளர் ரோஹித் கன்சால் அறிக்கையின்படி, ‘கோடை மண்டல பிரிவின் கீழ் வரும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச பகுதிகளில் ஜூன் 10 முதல் 30 வரை கல்லூரிகளுக்கான கோடை விடுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இதற்கிடையில் கடந்த ஒரு வாரமாக ஜம்மு பகுதியில் நிலவும் வெப்ப அலை நிலைமையை சமாளிக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் இந்த வெப்ப அலையிலிருந்து மக்களை பாதுகாப்பதை உறுதி செய்ய ஜம்முவின் பல பகுதிகளில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே அதிகளவு வெப்பநிலையை கவனத்தில் கொண்டு டெல்லி அரசு பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை தற்போது குறைத்துள்ளது. அந்த வகையில் கொரோனா தொற்றுநோய் காரணமாக மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இடைவெளியை ஈடு செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!