1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூன் 1 கோடை விடுமுறை தொடக்கம்!

0
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூன் 1 கோடை விடுமுறை தொடக்கம்!
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூன் 1 கோடை விடுமுறை தொடக்கம்!
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூன் 1 கோடை விடுமுறை தொடக்கம்!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறையை விரைவில் அறிவிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளதால் பல மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

கோடை விடுமுறை:

இந்தியாவில் தற்போது கோடை காலம் நிலவி வரும் நிலையில், வெப்பஅலை காரணமாக பல்வேறு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கிறது. குறிப்பாக வட மாநிலங்களான டெல்லி, ராஜஸ்தான், பீகார், ஒடிசா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கோடை வெயில் பொதுமக்களை வாட்டி எடுத்து வருகிறது. இதனால் சில மாநிலங்களில் 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் நிறைவடைந்து உள்ளது. ஓயாத வெப்பத்தின் காரணமாக, பல மாநிலங்கள் பள்ளி நேரத்தில் மாற்றங்களைச் செய்துள்ளன. அதற்கிடையில் பல மாநிலங்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கோடை விடுமுறையை முன்கூட்டியே அறிவித்துள்ளன.

அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விரைவில் சம்பளம்!

இருப்பினும் கொரோனா தொற்று நோயால் மாணவர்கள் கற்றல் இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு டெல்லி பள்ளி கோடை விடுமுறையை ஜூன் 18, 2022 வரை டெல்லி அரசு ஒத்திவைத்துள்ளது. டெல்லி பள்ளிகளில் கோடை வகுப்புகள் நடத்தப்படும் என்று டெல்லி கல்வி இயக்குநரகம் (DoE) அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தொற்றுநோய் மற்றும் பள்ளிகள் மூடல் காரணமாக உருவாக்கப்பட்ட கற்றல் பற்றாக்குறையை ஈடுசெய்ய இது அவசியம். இதற்கிடையில் பஞ்சாப் அரசு மே 14, 2022 முதல் மாநிலம் முழுவதும் கோடை விடுமுறையை அறிவித்துள்ளது. ஆந்திரப் பிரதேச பள்ளி மாணவர்கள் தங்கள் விடுமுறையை மே 6, 2022 முதல் தொடங்கி உள்ளனர்.

Exams Daily Mobile App Download

மேற்கு வங்க பள்ளிகளின் கோடை விடுமுறைகள் மே 2 இல் தொடங்கியது. உத்தர பிரதேசமும் பள்ளி விடுமுறைகளை மே 30 ஆம் தேதி தொடங்கும் என அறிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) வெளியிட்ட அறிக்கையின் படி, சி.பி.எஸ்.இ 12ம் வகுப்புக்கான 2ம் பருவத்தேர்வு, ஏப்ரல் 26ம் தேதி தொடங்கி ஜூன் 15 வரை நடைபெறும். மேலும் 10ம் வகுப்புக்கான 2ம் பருவ தேர்வு, ஏப்ரல் 26ம் தேதி தொடங்கி மே 24ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தேர்வுகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் CBSE 1 – 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு கோடை விடுமுறை ஜூன் 1, 2022 முதல் தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!