ஜூன் 30 வரை பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை – ஜூலை 1ம் தேதி மீண்டும் திறப்பு!

0
ஜூன் 30 வரை பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை - ஜூலை 1ம் தேதி மீண்டும் திறப்பு!
ஜூன் 30 வரை பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை - ஜூலை 1ம் தேதி மீண்டும் திறப்பு!
ஜூன் 30 வரை பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை – ஜூலை 1ம் தேதி மீண்டும் திறப்பு!

ஹரியானா மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 30 ஆம் தேதி வரைக்கும் கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளி நடைபெறும் நேரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை:

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து ஓரளவுக்கு கொரோனா பரவல் குறைந்ததும் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கப்பட்டன. மேலும், இரண்டு ஆண்டுகளும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருவதால் மாணவர்களின் கல்வித்திறன் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இழந்த கல்வித்திறனை மீட்டெடுக்க பல மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை குறைக்கப்பட்டுள்ளது.

புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – விநியோகம் தொடக்கம்!

சில மாநிலங்களில் கோடை விடுமுறையில் கூட பள்ளி மாணவர்களுக்கு கற்றல் திறன் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் மற்றும் இந்த கல்வியாண்டில் மாணவர்களுக்கு அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலும் அதிகரித்து வரும் காரணத்தினால் பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் ஹரியானா மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 1 முதல் தான் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 30 வரை உள்ள 30 நாட்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோடைவிடுமுறை முடிந்து ஜூலை 1 ஆம் தேதி முதல் அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்புகள் துவங்க இருக்கிறது. இதற்கிடையில் கடந்த சில ஆண்டுகளை விட இந்தாண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரைக்கும் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!