அனைத்து பள்ளிகளுக்கும் மே 2 முதல் ஜூன் 13 வரை கோடை விடுமுறை? அரசுக்கு பரிந்துரை!

0
அனைத்து பள்ளிகளுக்கும் மே 2 முதல் ஜூன் 13 வரை கோடை விடுமுறை? அரசுக்கு பரிந்துரை!
அனைத்து பள்ளிகளுக்கும் மே 2 முதல் ஜூன் 13 வரை கோடை விடுமுறை? அரசுக்கு பரிந்துரை!
அனைத்து பள்ளிகளுக்கும் மே 2 முதல் ஜூன் 13 வரை கோடை விடுமுறை? அரசுக்கு பரிந்துரை!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மே 2 முதல் ஜூன் 13 வரை கோடை விடுமுறை அளிப்பது தொடர்பான முன்மொழிவு, முதன்மை மற்றும் இடைநிலைக் கல்வி இயக்குநர்கள் சார்பில் முதன்மைச் செயலருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோடை விடுமுறை

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2021-22ம் கல்வியாண்டு முடிவடைவதற்கு இன்னும் ஒரு சில வாரங்களே மீதமிருக்கும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் கோடை விடுமுறை மற்றும் புதிய கல்வியாண்டு தொடங்குவதற்கான காலக்கெடுவை கல்வி இயக்குனரகம் முன்மொழிந்துள்ளது. இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், மகாராஷ்டிரா முழுவதும் உள்ள பள்ளிகள் கோடை விடுமுறைக்காக மே 2ம் தேதி மூடப்பட்டு, ஜூன் 13ம் தேதி முதல் புதிய கல்வியாண்டுக்காக திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 10, 11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை விளக்கம்!

இப்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிப்பது தொடர்பான முன்மொழிவு, முதன்மை மற்றும் இடைநிலைக் கல்வி இயக்குநர்களால் கையொப்பமிடப்பட்டு, முதன்மைச் செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த முன்மொழிவில், ‘மே 2, 2022 திங்கள் முதல் கோடை விடுமுறை தொடங்கலாம். புதிய கல்வியாண்டு ஜூன் 13, 2022ல் தொடங்கும். இப்போது கோடை வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு விதர்பாவில் ஜூன் 27 ஆம் தேதியன்று புதிய கல்வியாண்டுகளுக்கான பள்ளிகளை திறக்க பரிசீலிக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மகாராஷ்டிரா முழுவதும் உள்ள பள்ளிகளில் புதிய கல்வியாண்டில் ஒரே சீரான தன்மையை கொண்டு வர, கோடை விடுமுறை மற்றும் அடுத்த கல்வியாண்டின் தொடக்கம் குறித்து அரசு தீர்மானம் எடுப்பது முக்கியம் என்று அந்த முன்மொழிவு கூறுகிறது. அதே போல கிறிஸ்துமஸ் அல்லது கணபதி பண்டிகைக்கான விடுமுறையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததால், மாவட்ட அளவிலான கல்வி அலுவலர்கள் கோடை அல்லது தீபாவளி விடுமுறையைக் குறைக்கலாம் என்றும் ஒரு கல்வியாண்டில் மொத்த விடுமுறைகள் 76 நாட்களை தாண்டக்கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here