தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை – பெற்றோர்கள் புகார்!

0
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை - பெற்றோர்கள் புகார்!
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை - பெற்றோர்கள் புகார்!
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை – பெற்றோர்கள் புகார்!

தமிழகத்தில் கோடை வெயில் காரணமாக பள்ளி மாணவர்கள் உடல் நலம் பாதிக்கப்படுவதால், அவர்கள் நலன் கருதி 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கான சிறப்பு விடுமுறை குறித்த அறிவிப்பை நேற்று முன்தினம் கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார். இந்த அறிவிப்பு பள்ளிகளுக்கு முறையாகத் தெரிவிக்கப்படாததால், சுட்டெரிக்கும் வெயிலில் மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

பெற்றோர்கள் புகார்:

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக மாணவர்களின் கல்வி பெரும் பாதிப்பை சந்தித்தது. மேலும் தற்போது நோய் பரவல் தாக்கம் படிப்படியாக குறைந்து பள்ளி மாணவர்கள் கடந்த பிப்ரவரி 1 முதல் பள்ளிக்கு சென்று வருகின்றனர். மேலும் ஆண்டு இறுதி தேர்வுகளும் தொடங்கி உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் கோடை வெப்பம் வாட்டி வதைக்கிறது. இதனால் மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதால், 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு ஆண்டு, ஆண்டு இறுதி தேர்வு நடைபெறுமா என்ற கேள்வி பல தரப்பிலிருந்து எழுந்தது. தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு மே 5 முதல் 13ம் தேதி வரை ஆண்டு இறுதித்தேர்வு நடத்தப்படும். பள்ளி கடைசி வேலைநாளாக மே 13-ம் தேதி கணக்கில் கொள்ளப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது.

நாடு முழுவதும் மே 17 வரை முழு ஊரடங்கு அமல் – பிரதமர் அதிரடி உத்தரவு!

அதற்கேற்ப, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் ஆண்டு இறுதித்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டு, தேர்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், கோடை வெப்பம் உச்சம் தொட்டு உள்ளதால், மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை வழங்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்தன. இந்த கோரிக்கைக்கு செவி சாய்த்து, மாணவர்கள் பள்ளிக்கு தேர்வு எழுத வந்தால் மட்டும் போதும். மேலும் மற்ற நாட்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று முன்தினம் அறிவித்தார்.

இருப்பினும் இந்த சிறப்பு விடுமுறை குறித்த அதிகாரப்பூர்வத் அறிக்கை பள்ளிகளுக்கு இன்னும் முறையாக வரவில்லை. இதனால் பள்ளிகளுக்கு குழந்தைகள் செல்வது தொடர்பாக ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதுகுறித்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறும்போது, “விடுமுறை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று காலை தான் எங்களுக்குக் கிடைத்தது. அந்த தகவலை பெற்றோருக்கு உடனடியாகத் தெரிவிக்க முடியவில்லை. இதனால், பெரும்பாலான மாவட்டங்களில் மாணவர்கள் வழக்கம்போல பள்ளிக்கு வந்துவிட்டனர்.

Exams Daily Mobile App Download

அவர்களில், முழு ஆண்டுத்தேர்வு எழுதவிருந்த மாணவர்களைத் தவிர்த்து, மற்றவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். சிறப்பு விடுமுறை அறிவிப்பை கவனித்த சில பெற்றோர் மட்டுமே பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பவில்லை’’ என்றனர். இது தவிர, அரசின் சிறப்பு விடுமுறை உத்தரவுக்கு மாறாக, தனியார் பள்ளிகளில் வழக்கம்போல முழு நேர வகுப்புகள் நடைபெற்று வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!