பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை – மாநில வாரியான முழு பட்டியல் இதோ!

0
பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை - மாநில வாரியான முழு பட்டியல் இதோ!
பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை - மாநில வாரியான முழு பட்டியல் இதோ!
பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை – மாநில வாரியான முழு பட்டியல் இதோ!

தற்போது கோடை காலம் துவங்கி இருப்பதால் பஞ்சாப், மேற்கு வங்காளம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறைகளை அறிவித்துள்ளன. இது குறித்த மாநில வாரியான முழு பட்டியலை இப்பதிவில் பார்க்கலாம்.

கோடை விடுமுறை

இந்த ஆண்டு நாட்டில் நிலவும் கடுமையான வெப்பத்தின் காரணமாக பல மாநில அரசுகள் பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறையை அறிவித்துள்ளது. அதாவது, ஏப்ரல் மாத நடுப்பகுதியில் இருந்து நாடு முழுவதும் கடுமையான வெப்ப அலை வீசுவதால், பல மாநில அரசாங்கங்கள் மாணவர்களுக்கு ஆரம்ப பள்ளி கோடை விடுமுறையை முன்கூட்டியே அறிவித்து வருகின்றன. இது தொடர்பான ஊடக அறிக்கைகளின்படி, மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேச மாநில அரசுகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கோடை விடுமுறையை அளித்துள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் மூலம் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

ஏற்கனவே, இந்த ஆண்டு தொற்றுநோய் காரணமாக பள்ளிகள் வெகு நாட்களுக்கு மூடப்பட்டதால் இழந்த நேரத்தை ஈடுசெய்ய செய்ய கல்வியாண்டை நீட்டிப்பதற்கு மாநில அரசுகள் முன்னதாக முடிவு செய்திருந்தது. ஆனால் இப்போது நிலவும் வெப்ப நிலையை கருத்தில் கொண்டு பல மாநில அரசாங்கங்கள் தங்கள் திட்டங்களை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. அதன்படி இப்போது வரை கோடை விடுமுறை அறிவித்துள்ள மாநிலங்களின் முழு பட்டியலை பார்க்கலாம்.

கோடை விடுமுறை:

பஞ்சாப்:

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் 14 மே 2022 முதல் கோடை விடுமுறையை அரசு அறிவித்தது. இது குறித்து வெளியிடப்பட்ட ட்வீட்டில், “திடீரென கடுமையான அதிகரித்த வெப்பம் மற்றும் ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனைகளை கருத்தில் கொண்டு, மே 14 முதல் பஞ்சாபின் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேற்கு வங்கம்: இதே வழியில், மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசும் 2022 மே 2 முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறைக்கு மூடப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த முடிவு மாநில அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும்.

போபால்:

வெப்பச்சலனத்தின் காரணமாக போபால் மாவட்டத்தில் உள்ள பல பள்ளிகள் மாணவர்களுக்கான வகுப்புகளை ஏப்ரல் 29 முதல் முடிக்க முடிவு செய்துள்ளதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுச்சேரி:

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் உள்ள 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் 2022 ஏப்ரல் 30 முதல் மூடப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம்:

பள்ளிகள் அனைத்தும் மே 21 முதல் ஜூன் 30 வரை ஆண்டு கோடை விடுமுறைக்காக மூடப்பட்டுள்ளது. அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கு மொத்தம் 51 நாட்கள் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர்:

சத்தீஸ்கர் பள்ளிக் கல்வித்துறை, இந்த ஆண்டு கோடை விடுமுறை ஏப்ரல் 24 ஆம் தேதி தொடங்கி 2022 ஜூன் 14 ஆம் தேதி முடிவடையும் என்று அறிவித்துள்ளது.

ஆந்திரப் பிரதேசம்:

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு மே 6 முதல் ஜூலை 4 வரை பள்ளி கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா:

1 முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 2 முதல் ஜூன் 12 வரை மகாராஷ்டிரா பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இப்போது மகாராஷ்டிராவில் விதர்பாவைத் தவிர மற்ற அனைத்துப் பகுதிகளுக்கும் ஜூன் 13ஆம் தேதி பள்ளி கோடை விடுமுறைகள் முடிவடையும்.

ஒடிசா:

கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு ஒடிசா மாநில அரசு ஏப்ரல் 26 முதல் ஏப்ரல் 30 வரை சிறிய விடுமுறையை அறிவித்துள்ளது. இருப்பினும், பொது பள்ளி விடுமுறைகள் ஜூன் 6 முதல் ஜூன் 16 வரை இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!