அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மே 2 முதல் ஜூன் 13 வரை கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

0
அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மே 2 முதல் ஜூன் 13 வரை கோடை விடுமுறை - மாநில அரசு அறிவிப்பு!
அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மே 2 முதல் ஜூன் 13 வரை கோடை விடுமுறை - மாநில அரசு அறிவிப்பு!
அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மே 2 முதல் ஜூன் 13 வரை கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

கோடை காலம் ஆரம்பித்து விட்டால் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகளை விரைவில் நடத்து முடித்து, கோடை விடுமுறை அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும் என பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மே 2 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

கோடை விடுமுறை:

கொரோனா பாதிப்பால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மூடப்பட்ட பள்ளிகள் கடந்த பிப்ரவரி மாதத்தில் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் மாணவர்கள் மனதளவில் இயல்பு நிலைக்கு திரும்ப மிகவும் கஷ்டப்பட்டனர். இதற்கிடையில், 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டது. இயல்பாக +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் மாதத்தில் தொடங்கும். அதை தொடர்ந்து 10 ஆம் வகுப்புக்கும் பிற வகுப்புகளுக்கும் தேர்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிரா மாநிலத்தில், ஆண்டு இறுதி தேர்வு இந்த மாதம் வரை நடைபெறுவதால் கோடை விடுமுறைக்கான நாட்கள் குறைக்கப்படுமா என்ற குழப்பத்தில் மாணவர்கள் இருந்த நிலையில், மாணவர்களுக்கான கோடை விடுமுறை எத்தனை நாட்கள் என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை விளக்கம் அளிக்க வேண்டும் என மகாராஷ்டிரா மாநிலத்தில் கேள்வி எழுந்தது.

NPCC நிறுவனத்தில் ரூ.20,250/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு !

2021-22ம் கல்வியாண்டு முடிவடைவதற்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கோடை விடுமுறை மற்றும் புதிய கல்வியாண்டு தொடங்குவதற்கு குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது. எனவே மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவை பின்னர் அறிவிப்பதாகவும் தெரிவித்தனர். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை குறித்த குழப்பத்தை பள்ளிக்கல்வித்துறை திங்கட்கிழமை முடிவுக்கு கொண்டு வந்தது. இந்தியா முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகளுக்கு அதிகளவு விடுமுறை விடப்பட்டதால், 1 முதல் 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 30ம் தேதி வரை வகுப்புகளை நடத்த பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது.

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு 3% DR உயர்வு – யாருக்கெல்லாம் பலன் கிடைக்கும்? முழு விவரம் இதோ!

மகாராஷ்டிரா மாநிலத்தில் வழக்கமாக தேர்வு முடிந்த பின்னர் ஏப்ரல் 15ம் தேதியே 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக இன்னும் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் முழுமையாக முடிக்க படாததால் ஏப்ரல் 30ம் தேதி வரை வகுப்புகள் தொடரும் என்றும், மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை மே 2 முதல் ஜூன் 12 வரை இருக்கும் என்று அதன் அரசு தீர்மானம் தெரிவித்துள்ளது. அங்குள்ள அதிக வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு, ஜூன் 27 அன்று தொடங்கும் விதர்பாவைத் தவிர, பள்ளிகள் தங்கள் புதிய கல்வியாண்டை ஜூன் 13 ஆம் தேதி தொடங்கும் என்று குறிப்பிட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here