பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சுஜா? இந்த வார எவிக்சன்!

0
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சுஜா? இந்த வார எவிக்சன்!
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சுஜா? இந்த வார எவிக்சன்!
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சுஜா? இந்த வார எவிக்சன்!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு இரண்டாவது வாரம் முடிவுக்கு வந்துள்ளது. சென்ற வாரம் சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறிய நிலையில், இந்த வாரம் மக்களின் குறைவான வாக்குகள் பெற்று வெளியேற இருக்கும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் ப்ரோமோ:

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் கொடுத்த வரவேற்பை அடுத்து பிக்பாஸ் அல்டிமேட் என புதிய நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை நடந்து முடிந்த ஐந்து சீசன்களில் இருந்து சுவாரஸ்யமான 14 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு களமிறங்கினார்கள். அவர்களில் ஒருவர் தான் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்படுவார். இந்த நிகழ்ச்சியில் முதல் வாரமே நாமினேஷன் ப்ராசஸ் நடத்தப்பட்டு, அதில் குறைவான வாக்குகள் பெற்றதால் சசுரேஷ் தாத்தா வெளியேறினார்.

10 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 2 முதல் தேர்வுகள் துவக்கம் – கால அட்டவணை வெளியீடு!

மேலும் இந்த வாரமும் நாமினேசன் இருக்கிறது. அதில் வனிதா இருந்த நிலையில் சென்ற வாரம் ட்ரெண்டான போட்டியாளர் என்பதால் அவர் நாமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட்டார். மேலும் பாலாஜி முருகதாஸ், தாமரை, ஜூலி, தாடி பாலாஜி, அபிநய், சுஜா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்ட நிலையில் அவர்களில் சுஜா மக்களின் குறைவான வாக்குகளை பெற்று கடைசி இடத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் முதல் இடத்தில் பாலாஜி இருக்கிறார்.

இரவு 11 மணிமுதல் காலை 5 மணிவரை 10 நாட்களுக்கு ஊரடங்கு அமல் – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

அடுத்ததாக தாமரை இரண்டாவது இடத்தில் இருக்கிறார். நாளைய எபிசோடில் கமல் வருவார் என்பதால் இந்த நிகழ்ச்சி அதிக எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. மேலும் நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் சண்டைகளுக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அதனால் இந்த சீசனும் மாபெரும் வெற்றி அடையும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் சுஜா இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. பிக்பாஸ் வீட்டிற்கு வந்தது முதல் பல சர்ச்சைகளை சுஜா கிளப்பி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!