தமிழக பள்ளி மாணவர்களிடம் அதிகரிக்கும் தற்கொலைகள் – அரசின் புதிய நடவடிக்கை!
தமிழகத்தில் கடந்த ஆண்டில் இருந்து பள்ளி மாணவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது அதிகமாகி வருகிறது. இது தொடர்பான புகார்களும் வந்த வண்ணம் உள்ளது. இதனால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
மனநல ஆலோசனை:
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வாயிலாக பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த வருடம் சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் தொலைபேசி வாயிலாக மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் அந்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அண்மையில் கள்ளகுறிச்சி மாவட்டம் தனியார் பள்ளியில் மாணவி தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இது போன்று பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்து வருவது அதிகரித்து வருவதால் இதனை தடுக்க பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது மாணவர்கள் 14417 என்ற உதவி எண்ணை அழைத்து புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு மாணவர்கள் உயர் கல்வி சார்ந்த விழிப்புணர்வை பெறுவதற்காகவும், மனநலம் சார்ந்த ஆலோசனைகள் வழங்கவும் 14417 என்ற உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பிரத்யேக மையம் சென்னை டி.பி.ஐ வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த உதவி மையத்தை அழைக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் இதில் மன அழுத்தம் கொண்ட மாணவர்களோ தற்கொலை செய்யும் எண்ணம் உள்ள மாணவர்களின் அழைப்பு மிகவும் குறைவாக இருப்பதாக உதவி மைய அலுவலர்கள் கூறுகின்றனர்.
TN TET தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
குறிப்பாக, தங்களின் பிரச்னைகள் வெளியே தெரிந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே பல மாணவர்கள் இந்த எண்ணிற்கு அழைப்பதில்லை என்று அம்மைய அலுவலர்கள் கூறுகின்றனர். அதனால் இந்த உதவி மையத்திற்கு அழைக்கும் மாணவ மாணவிகளின் விவரங்கள் பாதுகாக்கப்படும் என்று உறுதி அரசு அளித்துள்ளது. மேலும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மாணவர்கள் எந்த தயக்கமும் இன்றி உதவி மையத்தை அழைத்து ஆலோசனை பெறலாம் என்று அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த உதவி எண் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் பெற வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.