நடிகை VJ சித்ரா கொலையில் திடீர் திருப்பம் – தப்பித்த கணவர் ஹேமந்த்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

0
நடிகை VJ சித்ரா கொலையில் திடீர் திருப்பம் - தப்பித்த கணவர் ஹேமந்த்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
நடிகை VJ சித்ரா கொலையில் திடீர் திருப்பம் - தப்பித்த கணவர் ஹேமந்த்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
நடிகை VJ சித்ரா கொலையில் திடீர் திருப்பம் – தப்பித்த கணவர் ஹேமந்த்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லையாக நடித்து நமது மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் நடிகை விஜே சித்ரா. இந்நிலையில் அவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவருடைய இறப்பு இன்னும் மர்மமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் அவருடைய கணவர் ஹேமந்த் குறித்த வழக்கு ஒன்றில் நீதிமன்றம் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.

நடிகை விஜே சித்ரா:

தமிழ் சின்னத்திரையில் விஜேவாக தன்னுடைய பயணத்தை தொடங்கி, அதன் பின் விஜய் டிவியில் டாப் சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக களமிறங்கி, தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ஏகப்பட்ட மக்களை கவர்ந்தவர் விஜே சித்ரா. அவர் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹோட்டல் ரூமில் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் விஜே சித்ரா இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவருடைய காதல் கணவர் ஹேமந்த்தை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஹேமந்த்திற்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ஆனால் ஹேமந்த் ஜாமீனை ரத்து செய்யக்கோரி அவரது நண்பர் சையத் ரோஹித் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் ஹேமந்த் தனது நீண்டகால நண்பர் எனவும் சித்ரா இறப்பில் பல தொல்லைகளை ஹேமந்த் கொடுத்து இருப்பது பற்றி தனக்கு தெரியும் எனவும், அதனால் காவல்துறையில் தான் முன் வந்து சாட்சி சொன்னதாக குறிப்பிட்டு இருந்தார்.

அடடா.. இப்படி ஒரு ரீஎன்ட்ரி-யா.. 2 வருடங்களுக்கு பிறகு தமிழ் சீரியலுக்குள் நுழையும் பிரபல சினிமா நடிகர்!

Exams Daily Mobile App Download

ஹேமந்த்தின் மற்ற நண்பர்கள் சாட்சி சொல்லாத நிலையில், தான் மட்டும் சாட்சி சொன்னதாகவும், அதனால் ஹேமந்த் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும், தனக்கும் தன்னுடைய குடும்பத்திற்கும் ஆபத்து இருப்பதாகவும், வெளியே இருக்கும் ஹேமந்த் தற்போது சாட்சிகளை கலைக்க முயற்சி செய்து வருவதாக குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா விசாரித்த நிலையில், ஹேமந்த் தனது நண்பர் சையத் ரோஹித்தை மிரட்டியாதாக கொடுக்கப்பட்ட புகார் உண்மை இல்லை என தெரிய வந்ததால், வழக்கு முடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!